Coronavirus

நொய்டாவில் ஆரோக்யா சேது ஆப் இல்லாமல் வெளியில் சென்றால் அபராதம்!

நொய்டா பகுதிகளில் ஆரோக்ய சேது ஆப் இல்லாமல் பொது இடங்களுக்கு வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கொரோனா பரவல் குறித்து அறிந்து கொள்வதற்கு, கொரோனா பாதிக்கப்பட்ட நபர், நாம் இருக்குமிடத்திலிருந்து எவ்வளவு தூரத்திலிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் மத்திய அரசு ஆரோக்கிய சேது என்ற ஆப்பை வெளியிட்டுள்ளது. அந்த ஆப்பை அனைவரையும் மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்திவருகிறது.

இந்த நிலையில், மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘மொபைல் போனில் ஆரோக்ய சேது ஆப் இல்லாமல் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளில் பொது இடங்களுக்கு மக்கள் வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆரோக்ய சேது ஆப் இல்லாமல் இருப்பது கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறுவதாகும்’ என்று குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘மத்திய அரசு, பொதுத்துறை, தனியார் நிறுவன ஊழியர்கள் கட்டாயம் ஆரோக்ய சேது ஆப்பை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்துவைத்திருக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது. முன்னதாக, ஆரோக்ய சேது ஆப்பில் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பில் குறைபாடுகள் இருப்பதாக ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்

Related posts

Shraddha Srinath shares her bitter experience about crowded buses

Penbugs

Trump to ban Chinese airlines from flying to US

Penbugs

Zomato introduces priority delivery for “COVID19 emergency”

Penbugs

1st T20I: Germany beats Austria by 82 runs

Penbugs

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாகனப் பதிவு அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம்

Penbugs

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

Kesavan Madumathy

14YO sexually assaulted by two teens in COVID19 centre

Penbugs

மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் : ஸ்டாலின்

Penbugs

Seven more Pakistan cricketers tested positive for COVID19

Penbugs

டாஸ்மாக் நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு

Kesavan Madumathy

இன்று ஒரே நாளில் 5295 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

எட்டு மாவட்டங்களில் இன்று ஒற்றை இலக்கத்தில் கொரோனா எண்ணிக்கை

Penbugs