Editorial News

சென்னையில் துவங்கியது ஐபோன் 11 மாடல் தயாரிக்கும் பணி

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 மாடல் தயாரிப்பு, சென்னையில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் தொடங்கி விட்டதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இது, மேக் இன் இந்தியா திட்டத்திற்கு, குறிப்பிடத்தக்க அளவில் ஊக்கம் அளிப்பதாக அமையும் என்று அவர் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் 20 சதவீத உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், முதன் முறையாக ஐபோன் 11 மாடல் 100 சதவீதம் சென்னை பாக்ஸ்கான் ஆலையில் தயாரிக்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக ஐபோன் எக்ஸ் ஆர் மாடல் உதிரிபாகங்கள் உற்பத்தி இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு தொடங்கியது.

ஐபோன் எஸ்இ மாடலை பெங்களூருவில் உற்பத்தி செய்யவும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பாக்ஸ்கான் நிறுவனம் விரிவாக்க நடவடிக்கைக்காக இந்தியாவில் 7500 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Joe Biden picks Kamala Harris as running mate, makes her 1st black person to do so

Penbugs

Wheelchair cricketer turns labourer due to lockdown

Penbugs

J.K. Rowling Introduces The Ickabog : Her New Children’s Book

Lakshmi Muthiah

COVID19: Man rescued by Sonu Sood, names his shop after him

Penbugs

Private hospitals, Labs in TN can treat Corona suspect patients

Penbugs

ரயில் நிலையங்களில் இன்று முதல் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு

Kesavan Madumathy

Husband celebrates house warming function with dead wife’s wax statue

Penbugs

Kareena Kapoor-Saif Ali Khan expecting second child

Penbugs

UP farmer’s son who scored 98.2% will head to Cornell University

Penbugs

வீரமரணமடைந்த ராணுவ வீரரின் உடலை கண்ணீருடன் தோளில் சுமந்து சென்று சத்தீஸ்கர் முதல்வர் …!

Kesavan Madumathy

Key Milestones of Vajpayee’s political career

Penbugs

What Chidambaram wants during his stay

Penbugs

Leave a Comment