Editorial News

மதுரையில் தன் மகனுக்கு மெழுகுச்சிலை ; தந்தை உருக்கம்

உடல்நலக்குறைவால் உயிரிழந்த மகனுக்கு முதலாம் ஆண்டு நினைவு நாளில் 6 அடிக்கு மெழுகு சிலை அமைத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த பாசக்கார தந்தை முருகேசன்.

முருகேசன் – சரஸ்வதி தம்பதியருக்கு இரண்டு மகள்களுக்கு பிறகு, மூன்றாவது மகனாகப் பிறந்தவர் மாரிகணேஷ். அவருக்கு திருமணமாகி மகன் மற்றும் மகள் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சிறு வயதில் புல்லட் பைக் ரேசராக இருந்த மாரிகணேஷ் பல போட்டிகளில் முதலிடம் பிடித்து பதக்கங்கள் மற்றும் விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிகணேஷ் 2019, நவம்பர் மாதம் 18 ஆம் தேதியில் உயிரிழந்தார்.

மாரிகணேஷின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது தந்தை முருகேசன் சுமார் 6 லட்சம் செலவில் மாரிகணேஷ்க்கு தத்ரூபமாக மெழுகு சிலை செய்துள்ளார்.

மாரிகணேஷின் உருவ சிலையைக் காணவும், முதலாமாண்டு நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்தவும் அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் நெகிழ்ச்சியுடன் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Related posts

நேரடி‌ வகுப்புகள் கல்லூரிகளில் ரத்து: தமிழக அரசு

Penbugs

Bayern Munich wins champions league title

Penbugs

I may be the 1st woman in this office, I will not be the last: Kamala Harris

Penbugs

“This is what I want for my birthday” PM Modi writes

Penbugs

IPL 2020: Lasith Malinga likely to miss tournament

Penbugs

சென்னை மெட்ரோ ரயில் ; இன்று இலவச பயணம்

Penbugs

காலாவதி ஆன ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச்சான்று மார்ச் 31 வரை செல்லும்

Penbugs

The ever run-hungry Devdutt Padikkal

Penbugs

Rape-accused Godman Nithyananda announces visa, flight to Kailasa

Penbugs

தமிழக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த ஓபிஸ்

Penbugs

மினி கிளினிக் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதலமைச்சர்

Penbugs

Unnao Rape survivor’s lawyer, who survived the car crash last year, dies

Penbugs

Leave a Comment