Coronavirus

அமெரிக்காவில் இரண்டு வளர்ப்பு பூனைகளுக்கு முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரு வேறு பகுதிகளில் வசித்து வரும் இரண்டு வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், இவை இரண்டுக்கும் லேசான அறிகுறிகளே தென்படுகின்றன. அதனால், குணமடைந்து மீண்டும் பழைய நிலைக்கு அவை வரும் என தெரிவித்துள்ளது.

இவற்றில், முதல் பூனையை வளர்ப்போர் வீட்டில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. வீட்டிற்கு வெளியே கொரோனா வைரஸ் பாதித்த நபர் எவரேனுடனோ ஏற்பட்ட தொடர்பில் இந்த பூனைக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது பூனையின் உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்பின்பே பூனைக்கு, சுவாச பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிய வந்தன என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலில் வளர்ப்பு பிராணிகளுக்கு எந்த பங்கும் இல்லை. அதற்கான சான்றுகளும் இல்லை. அதனால் வளர்ப்பு பிராணிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறப்படுவதில் எந்தவித நியாயமும் இல்லை என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிராங்ஸ் விலங்கியல் பூங்காவில் உள்ள புலி ஒன்றுக்கு, இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட இருமலை தொடர்ந்து நடந்த பரிசோதனையில், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதேபோன்று 6 புலிகள் மற்றும் சிங்கங்களுக்கும் அறிகுறிகள் தென்பட்டன. எந்தவித அறிகுறிகளும் தென்படாத ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட விலங்கியல் பணியாளரிடம் இருந்து இந்த விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்க கூடும் என கூறப்பட்டது.

Related posts

பேருந்துகளில் பயணிப்போருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Penbugs

Boris Johnson names his child after doc who saved his life

Penbugs

கொரோனாவிற்கு எதிரான போரில் செவிலியராக மாறிய நடிகை – குவியும் பாராட்டுக்கள்

Penbugs

விவேக் எங்கும் சென்றுவிடவில்லை: நடிகர் வடிவேலு

Penbugs

கொரோனா பரவல் அதிகமாவதை அடுத்து புதிய கட்டுப்பாடுகள் தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

ஊரடங்கு உத்தரவின் வழிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம் …!

Penbugs

You are letting the team down: Kohli to RCB members on breaching bio-bubble protocol

Penbugs

தமிழகத்தில் இன்று 6,031 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Kesavan Madumathy

Coronavirus: Suresh Raina donates 52 Lakhs for relief fund

Penbugs

La Liga: Real Madrid Celebration images!

Penbugs

மெரினா செல்ல இன்று முதல் அனுமதி

Penbugs

தமிழகத்தில் இன்று 5516 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs