Coronavirus

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள போதிலும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் அதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இது அடுத்த நான்கு ஆண்டுகளில் மூன்று தவணைகளாக விடுவிக்கப்படும் என்றும் இதில், ரூ.7,774 கோடி தொகையை உடனடியாக விடுவிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்குத் தேவையான உபகரணங்கள், மருந்துகளின் மையப்படுத்தப்பட்ட கொள்முதல் உள்பட கொரோனா தடுப்புப் பணிக்குத் தேவையானவை அனைத்தும் இதன்மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Kesavan Madumathy

Former PM Manmohan Singh tests positive for coronavirus, admitted

Penbugs

மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 4% அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

Penbugs

கொரோனா தொற்றால் மேற்கு வங்க எம்எல்ஏ உயிரிழந்தார்

Penbugs

After donating to FEFSI, Sivakarthikeyan donates 25 Lakhs to CM relief fund

Penbugs

ஊரடங்கு காலத்தில் 1,150 டன் மருத்துவப் பொருள்களை கொண்டு சென்ற ரயில்வே

Penbugs

தமிழகத்தில் இன்று 5517 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5043 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனா தொற்றால் மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழப்பு

Penbugs

மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

இறந்தவர்களின் சடலத்திலிருந்து நோய் பரவாது”- சென்னை மாநகராட்சி

Penbugs