Editorial News

கார்கில் வெற்றி தினமான இன்று தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் மரியாதை

கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் நினைவாகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக், முப்படைகளின் தளபதிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

1999ஆம் ஆண்டு மே மாதத்தில் காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் படையினரை வெளியேற்றுவதற்காக இந்திய ராணுவத்தினர் போரிட்டனர். 3 மாதங்கள் நீடித்த இந்தப் போர் ஜூலை 26ஆம் நாள் முடிவுக்கு வந்தது.

இந்தப் போரில் இந்திய ராணுவத்தில் ஐந்நூற்றுக்கு மேற்பட்டோரும், பாகிஸ்தான் ராணுவத்தில் எழுநூற்றுக்கு மேற்பட்டோரும் உயிரிழந்தனர்.

கார்கில் போரின் 21ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி டெல்லியில் போர் நினைவுச்சின்னத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, கடற்படைத் தளபதி கரம்பீர் சிங், விமானப்படைத் தளபதி ராகேஷ்குமார் சிங் படாரியா ஆகியோர் கலந்துகொண்டு, போரில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

நாட்டைக் காக்கும் பணியில் வீரர்களின் உயிர்த்தியாகத்தை அவர் நினைவுகூர்ந்தார்.

Related posts

NZ PM Jacinda Ardern stays cool as Earthquake strikes during live interview

Penbugs

Emotional video: Health worker mom meets daughters after 2 months

Penbugs

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

Penbugs

தமிழகத்தில் இன்று 161 பேருக்கு தொற்று உறுதி…!

Penbugs

What Chidambaram wants during his stay

Penbugs

Experts committee recommends extended lockdown for TN

Penbugs

நீட் தேர்வு தேதி அறிவிப்பு

Penbugs

Breaking: Pervez Musharraf handed death sentence in Treason Case

Penbugs

Google services, including Google Maps faces outage

Penbugs

ஒடிசாவில் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்த தங்க மனிதன்

Penbugs

Nepal parliament votes on new map that includes Indian territory

Penbugs

ஊரடங்கு உத்தரவு சமயத்தில் யோகி ஆதித்யநாத்தின் மிக முக்கிய அறிவிப்பு…!

Penbugs

Leave a Comment