Coronavirus

மராட்டியத்தில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த வைரஸ் தொற்றுக்கு 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 681 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,393 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 388 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 4,258 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் தான் நாட்டிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகமாக உள்ளது. அந்த மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,652 ஆக இருந்தது.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் இன்று மேலும் 778 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,427 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் இன்று மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related posts

இசையமைப்பாளர் சங்கத்துக்கு இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் நிதியுதவி

Kesavan Madumathy

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆந்திரத்தில் பேருந்து சேவை தொடக்கம்

Kesavan Madumathy

தமிழகத்தில் நாளை முதல் ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி!

Kesavan Madumathy

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

Penbugs

IPL 2020: All 13 CSK members tested negative

Penbugs

தமிழகத்தில் இன்று 5718 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Pallavaram: Migrant workers protest demanding to send back home

Penbugs

COVID19: Passenger from UK tested positive in Chennai

Penbugs

103-year-old woman celebrates with beer after beating COVID-19

Penbugs

தமிழக முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Penbugs

MS Dhoni’s parents tests COVID19 positive, admitted

Penbugs

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கும்,மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி

Penbugs