Penbugs
Coronavirus

ஒமைக்ரான் பரவல்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

நாட்டில் தற்போது படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை முழுமையாக இல்லை.

மருத்துவமனைகளில் தட்டுப்பாடு இன்றி ஆக்ஸிஜன் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் குறித்து மக்கள் பதற்றமடைய தேவையில்லை. எதிர்த்துப் போராட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கைகழுவுதல், மாஸ்க் அணிதல் போன்றவற்றை எப்போதும் மறந்து விடாதீர்கள் என நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் இந்தியாவில் முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 10-ம் தேதி முதல் கூடுதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அதாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இந்தியாவில் மருத்துவ பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் ஜனவரி 10-ம் தேதி முதல் செலுத்தப்பட உள்ளது” எனத் தெரிவித்தார்.

Related posts

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Kesavan Madumathy

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி

Kesavan Madumathy

ஜூன் 21 முதல் மாநிலங்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி -பிரதமர் மோடி உரை

Kesavan Madumathy

இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை..!

Kesavan Madumathy

Modi’s lock down announcement : essential services to remain operational

Anirudhan R

Leave a Comment