Coronavirus

ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிப்பா? வரும் 27 ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா பாதிப்பு தொடர்பாக வரும் 27 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அந்த வைரசை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா வைரசிடம் இருந்து தப்பிக்க தனித்து இருப்பது மட்டுமே சிறந்த வழி என்பதால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமல் படுத்தி உள்ளன.

அந்த வகையில் இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி ஊரடங்கை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அன்றைய தினம் நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். அந்த ஊரடங்கு ஏப்ரல் 14-ந் தேதியுடன் முடிவடைந்தது. எனினும், கொரோனா கட்டுக்குள் வராததால், மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நடவடிக்கை எடுத்தார்.

இந்தியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்தாலும், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்தே வருகிறது.

இந்த நிலையில், வரும் 27 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய ஆய்வுக் கூட்டமாக இது இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

எனினும், ஊரடங்கு தொடர்பாகவும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசிப்பார் என்றே தெரிகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு மூன்றாவது முறையாக பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த முறை பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய போது, 17 மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது நினைவுகூரத்தக்கது.

Related posts

Trump suspends H-1B, H-4 visas till year end

Penbugs

இசையமைப்பாளர் சங்கத்துக்கு இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் நிதியுதவி

Kesavan Madumathy

`முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம்!’ – ஹோம் மேட் மாஸ்க் அணிந்திருந்த பிரதமர் மோடி

Kesavan Madumathy

குடும்ப அட்டைகளுக்கும் மே மாதத்துக்கான பொருள்கள்: இலவச டோக்கன் வழங்கும் பணி நாளை தொடக்கம்

Penbugs

சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 1000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு

Penbugs

COVID19: Kerala CM Pinarayi Vijayan confirms community spread

Penbugs

சென்னையில் கொரோனாவிலிருந்து குணமானோரின் விகிதம் 62 சதவீதமாக அதிகரித்துள்ளது

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,852 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

AIIMS doctor puts own life at risk, removes safety gear to help critically-ill COVID-19 patient

Penbugs

சாத்தான்குளம் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு அரசு பணி

Penbugs

ENG v WI, 3rd Test, Day 2: Bowlers put England on top

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4910 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy