தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணிநேரம் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மது விற்பனை கடந்த 16ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கிய நிலையில் முதல் நாளில் 163 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையானது. நேற்று 133 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
மாநகர் நீங்கலாக சென்னை மண்டலத்தில் 5.6 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 32.5 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 34.8 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 29.6 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 30.6 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணிநேரம் நீட்டிக்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இருந்த மது விற்பனை தற்போது இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.