தமிழகத்தில் ஒரு வார காலத்துக்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு திங்கள் கிழமை முதல் அமல் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மிக மிக அத்தியாவசிய தேவையான மருந்தகங்கள் போன்ற ஒரு சில கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும் என அறிவிப்பு
முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி.பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு மட்டும் அனுமதி
தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்…
இன்றும், நாளையும் மட்டும் தனியார், அரசுப் பேருந்துகள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்படும்…
உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி
உணவகங்களில் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி
முழு ஊரடங்கு அமலுக்கு வந்தும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறையாததால், அமலில் உள்ள ஊரடங்கை இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட இருப்பதால் இன்றும் நாளையும் (23/5/21) கடைகளுக்கு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி.
மின்னணு சேவை (E-Commerce) காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்க அனுமதி
மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை – தமிழக அரசு அறிவிப்பு



