Editorial News

டைம் பத்திரிகையின் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்கள் பட்டியலில், பிரதமர் மோடி

அமெரிக்காவின் ‘டைம்’ இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்குமிக்க 100 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார்.

டைம் இதழ் சார்பில் ஆண்டுதோறும் ‘டைம் 100’ என்ற பெயரில் உலகின் 100 செல்வாக்குமிக்க தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான பட்டியலை டைம் இதழ் நேற்று வெளியிட்டது. முன்னோடிகள், கலைஞர்கள், தலைவர்கள், முக்கியமானவர்கள், பிரபலமானவர்கள் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் உலகின் 100 செல்வாக்குமிக்க தலைவர்களை டைம் இதழ் பட்டியலிட்டுள்ளது.

இதில் ‘தலைவர்கள்’ பிரிவில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பெற்றுள்ளார்.

ஏற்கெனவே கடந்த 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில் வெளியான ‘டைம் 100’ பட்டியலில் பிரதமர் மோடி இடம்பிடித்தார். தற்போது 4-வது முறையாக டைம் இதழ் அவரை கவுரவப்படுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த எச்ஐவி வைரஸ் ஆராய்ச்சியாளர் ரவீந்திர குப்தா, ஆல்பாபெட், கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா ஆகியோரும் ‘டைம் 100’ பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

Related posts

Cristiano Ronaldo tested positive for coronavirus

Penbugs

BAA vs VID, Match 3, ECS Austria-Vienna-2021, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் மாற்றம்

Penbugs

Breaking: YouTube experiences technical problem and is globally down

Penbugs

The ever run-hungry Devdutt Padikkal

Penbugs

Emmy Awards 2020- Full list of winners

Penbugs

தமிழ்நாட்டு சமையலில் இறங்கி அடித்த ராகுல் காந்தி

Penbugs

Chennai’s Nethra becomes 1st Indian woman sailor to qualify for Olympics

Penbugs

Naomi Osaka- The Role Model

Penbugs

உள் ஒதுக்கீடு மசோதாக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா

Penbugs

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: முதல்வர் பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

Penbugs

TN Government to provide free sanitary napkins to women in urban areas

Penbugs

Leave a Comment