Cinema

என் நெஞ்சில் குடியிருக்கும் தளபதி

அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத
வாழ்க்கை – ங்க முடிஞ்ச வரைக்கும்
எல்லாரையும் சந்தோஷப்படுத்துவோம்,

நம்ம நண்பர் அஜித் மாதிரின்னு அவர் சொல்லும் போது ஒரு அஜித் சார் ஃபேனா இருந்துட்டு தளபதிக்கு எழுதலேனா எப்படி,

ஊர் ஆயிரம் சொல்லட்டும் ஆனா என்னோட பார்வையில விஜய் ணா பத்தி எழுதணும்ன்னு எனக்கு ஒரு சின்ன ஆசை,

முயற்சி செய்யுறேன்
நம்ம அண்ணா பிறந்தநாளுக்காக
ஒரு அஜித் சார் ரசிகன் – ன்ற முத்திரையுடன்,

நிறைய மாஸ்ஸா எடிட்ஸ்லாம்
பசங்க கடைசி மூணு நாளா
இறக்கிட்டு இருக்காங்க எல்லா பக்கமும்,

So,நம்ம அப்படியே கொஞ்சம் அண்ணாவோட Charmness,Feel Good
இந்த பக்கத்துக்கு போவோம்,

மாஸ் மாஸ் – ன்னு விஜய் ணாவ
ஒரு மீள் வட்டத்துக்குள்ள அடைச்சு
வச்சுட்டாங்களோன்னு ஒரு வருத்தம்
இருந்துட்டே இருக்கு,

ரொம்ப பெரிய பஞ்ச் வசனம்,
ஓவர் டோஸ் மாஸ் சீன்ஸ்ன்னு நிறைய,

ஆனா வெற்றிமாறன் கதாப்பாத்திரம்
கில்லி சரவண வேலு போன்ற
கதாப்பாத்திரங்கள் சில நேரம்
சொல்லி அடிக்கும் சும்மா கில்லியா,

ஆனா அவரோட Charmness &
Certain Feel Good Versions காமிச்சது
ரொம்ப கொஞ்ச பேரு தான்னு தோணுது,

அது மாதிரி ஒரு தல ரசிகனா
நான் விஜய் அண்ணாவ எப்படி
பார்க்கணும்ன்னு ஆசைப்படுறேன்னு
இங்க சொல்ல முயற்சி செஞ்சுருக்கேன்,

ஜான் மஹேந்திரன் சார்
நம்ம சச்சின் படத்தோட இயக்குநர்
ரிசன்ட்டா ஒரு இன்டெர்வியூல கூட
சொல்லி இருந்தாரு எல்லாருமே
விஜய் சார மாஸ் சீன்,பஞ்ச் டயலாக்ஸ் ன்னு
யூஸ் பண்ணுறாங்க,அவர் கிட்ட ஒரு
Charm இருக்குன்னு,அந்த Charm தான்
நம்ம Frame by Frame பாத்து ரசிச்ச
சச்சின் படத்தோட கேரக்டர்ன்னு,

இனிமே எத்தனை வருஷம்
ஆனாலும் அந்த கேரக்டர வேற
எந்த இயக்குநராலையும் திரும்ப
ஸ்க்ரீன்ல கொண்டு வர முடியாது
அந்த Charmness,அந்த துரு துருன்னு
இருக்க ஒரு Cool attitude,எல்லா வலிகளையும்
பெருசா எக்ஸ்பிரஸ் பண்ணாம தனக்குள்ள
வச்சுட்டு வெளிய சிரிச்சிட்டே பேசுற அந்த
காட்சின்னு நான் ரசிச்ச ஒரு பொக்கிஷம்
அந்த கேரக்டர், விஜய் ரசிகர்களை தவிர
நிறைய நடிகர்களின் ரசிகர்களை கவர்ந்த
படம் அது,

கொஞ்சம் 90’ஸ் பக்கம் போனா
காதலுக்கு மரியாதை,பூவே உனக்காக,
லவ் டுடே போன்ற ரொம்ப Soft ஆக
அண்ணா Play பண்ண கேரக்டர்ஸ்
அதெல்லாம்,

அந்த Soft கேரக்டர் தான்
அவரோட ஒரிஜினாலிட்டிய்யும் கூட
ரொம்ப வருஷமா யாருமே காமிக்காத
அந்த Soft கேரக்டர திரும்ப திரையில
கொண்டு வந்தது நம்ம A.L.Vijay தான்
தலைவா படத்துல,

படத்துல ஒரு டான்ஸ் மாஸ்டரா
ரொம்ப கூல் லான Attitude அப்படியே
Character Change பண்ண மாதிரி மும்பைல டான் கேரக்டர் ரொம்பவே சைலண்ட்,

யாருக்கு எப்படியோ
படம் வெற்றியோ தோல்வியோ
விஜய் அண்ணாவ அவரோட
ஒரிஜினாலிட்டிய அப்படியே நடிக்க
வச்சதுக்கே இயக்குநர் A.L.Vijay – ய
விஜய் ரசிகர்கள் தலையில
தூக்கி வச்சு கொண்டாடணும்,

அப்பறம் நம்ம மெர்சல் படத்துல வர
அந்த முதல் ஏர்போர்ட் காட்சி மட்டும்,

நண்பர் அஜித்க்கு கோர்ட் சூட்ணா
விஜய் அண்ணாக்கு வேஷ்டி சட்டை சார்,

ஆனா, வேஷ்டி சட்டை கெட்அப்ல
அந்த மனுஷன ஒரு முழு ரோல் யாருமே
பெருசா நடிக்க வைக்கலையேன்னு
ஒரு ஆதங்கம் எனக்கு இன்னும் இருக்கு,

மெர்சல் ஏர்போர்ட் சீன்ல
பச்சை சட்ட வெள்ள வேஷ்டில
அப்படியே ரொம்ப கம்மியா பேசி
மனுஷன் அவளோ அழகா ஸ்கோர்
பண்ணுவாரு, அந்த Calmness இங்க
எவளோ பேருக்கு பிடிக்கும் தெரியல,
ஆனா அந்த Calmness தான் விஜய்
அண்ணாவோட சூப்பர் ஸ்பெஷல்,

வெற்றிமாறன் கேரக்டர் மாஸா
வேஷ்டி சட்டைல சும்மா அதகளம்
பண்ணாலும் அந்த கேரக்டரோட
ஸ்பெஷல்னா எமோஷனலா நமக்கு
கனெக்ட் ஆகும்,அதுவும் வெற்றிமாறன்
சாகுற சீன்ல நமக்கே ஒரு பரிதாபம்
அமையும்,

அப்பறம் கத்தி ஜீவாநந்தம் கேரக்டர்,
யாருக்கும் தீங்கின்றி வெளுத்ததெல்லாம்
பால்ன்னு நினைக்குற அந்த குழந்தை
மனசுல விஜய் ணாக்கு ரொம்ப பாத்து
பாத்து வடிவமைச்ச ஒரு கேரக்டர் அது,

அப்பறம் நண்பன் படத்தோட
பாரி – கோஸாக்ஷி பசப்புகழ் கேரக்டர்
அமீர் கான் ரோல்க்கு ஒரு Perfect சாய்ஸா
விஜய் ணா அழகா பொருந்தியிருப்பார்,
ஒவ்வொரு டைமும் All is Well – ன்னு
அண்ணா சொல்லும்போதெல்லாம்
நமக்கே ஒரு பாசிட்டிவிட்டி கிடைக்கும்
அதெல்லாம் செம்ம ஃபீல்,பெர்சனல்
ஃபேவரிட்ன்னு சொல்லுற அளவு
ரொம்பவே நான் ரசிச்சுப்பார்த்த
ஒரு ரோல் நண்பன் படம்,

அடுத்து காவலன் பூமிநாதன் ரோல்,
ஜாலியான ரோல் தான் ஆனா தன் முகம்
தெரியாத காதலியை பார்க்கப்போகும்
போது அசினிடம் பேசிவிட்டு அந்த பார்க்
சீனில் தடுக்கி கீழே விழும்போது
” அண்ணா ப்ளீஸ் ணா இந்த மாதிரி
எமோஷனல் லவ் படம் பண்ணுங்கணா “
பஞ்ச் எல்லாம் கொஞ்சம் ஓரம்
தள்ளிட்டுன்னு அவர் கை பிடிச்சு
சொல்லணும் போல இருந்துச்சு,

கடைசியா குஷி சிவா ரோல்,
என்னோட பேரு வேற பிடிக்காம
போயிருமா என்ன,முழுக்க முழுக்க
S.J.Surya சாரோட Body Language அப்படியே
Total Change,துளி கூட விஜய் ணா Mannerism
வெளிய வராம ஒரு பக்கா எக்ஸ்பிரிமெண்ட்
படம்,டிவில ஒரு நாளைக்கு தொடர்ந்து
நான்கு முறை ஒளிபரப்பினால் கூட
சலிக்காமல் பார்ப்பவன் நான்,

Feel Good – ஆ வரிசைப்படுத்தி
சொன்னா எப்படி கொஞ்சம்
Commercial மாஸ் சொல்லனும்ல,
Commercial மாஸ்ன்னு சொன்னோன
நம்ம கில்லி சரவண வேலு
கேரக்டர் இல்லாம எப்படி ஹ்ம்ம்,

சரவண வேலு செம்ம ஜாலியா அப்படியே லோக்கலா ஏரியா பசங்க கூட சுத்திட்டு அப்பாட்ட திட்டு வாங்கிட்டு தங்கச்சி கிட்ட வம்பு இழுத்துட்டு அம்மா செல்லமா வர ஒரு கேரக்டர்,எல்லாமே சும்மா அஸ்ஸால்ட்டா பண்ணிட்டு போயிட்டே இருக்கும்படியான ஒரு கதாப்பாத்திரம்,அப்படியே சீரியஸா இன்னொரு பக்கம் சேஸிங் ஃபைட்டிங்ன்னு தனக்குள்ள காதல் வந்தது கூட தெரியாம காதலிய ஊருக்கு அனுப்ப ஏர்போர்ட்ல விட்டுட்டு அப்பறமா எதார்த்தமா அவள நினைச்சு மனசுக்குள்ள உருகுற ரோல்,
சும்மா மசாலா தூக்கல ரெண்டு மசாலா பால் குடிச்ச மாதிரி படம் முழுக்க செம்ம எனர்ஜில மனுஷன் வெறியா இருப்பாரு,

அப்படியே விஜய் அண்ணா
வாய்ஸ் பக்கம் போனா மனுஷன்
பூந்து விளாசுவாரு,ஆனா இப்போ
இருக்க இசையமைப்பாளர்கள்
அவர் குரலுக்கான சரியான
தீணிய அவருக்கு போடலன்னு தான்
சொல்லுவேன், ஒரு Professional சிங்கரா
விஜய்ணாவ யூஸ் பண்ணதுன்னு கேட்டா
நிச்சயம் அது இளையராஜாவும்
தேவாவும் தான்னு அடிச்சு சொல்லலாம்,

ரெண்டு விதமா விஜய்ணா குரல
நம்ம பாட்டுக்கு பயன்படுத்தலாம்,

முதல் ரகம் காதலுக்கு மரியாதை
” ஓ பேபி ” பாடல் வகையில்,

ஹோ,
தேவதை தரிசனம் கிடைத்ததே
ஆலய மணி இங்கு ஒலித்ததே
என்னைத் தந்தேன் – ன்னு இந்த வரிகள்ல ரொம்ப அழகா க்யூட்டா ஒரு லவ் சாங் பாடிருப்பாரு,

இன்னொரு ட்ராக் பாத்திங்கன்னா
நெஞ்சினிலே படத்துல “தங்க நிறத்துக்கு”
பாட்டுல சும்மா பாட்டோட வரிய அப்படியே
அனுபவிச்சு கானா ஃபீல்ல லோக்கலா
பெப்பியா பாடிருப்பாரு,

இதயத்த கொடுத்திடு
இந்தியாவே உனக்கு தான் – ன்ற வரில
விஜய் ணா வாய்ஸ் ஜிவ்வுன்னு
இருக்கும் பாட்டோட மூட்க்கு ஏற்ப,

இது போன்ற ஒரு மெனக்கெடலிட்டு
பாடும் படியான பாடல் தீணி போட்டால்
விஜய்ணா வெளுத்து காட்டுவார்
ஆல் ஏரியா ஐயா கில்லிடான்னு,

ஒரு அஜித் ரசிகனா இருந்து நான் விஜய் அண்ணாவ எப்படி எல்லாம் ரசிச்சேன்னு சொல்லிருக்கேன் இங்க,சில தீவிரமான அஜித் ரசிகர்களுக்கு இது பிடிக்காம கூட போகலாம், ஆனா விஜய் ணா சொல்லுற மாதிரி தான் அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை – ங்க முடிஞ்ச வரைக்கும் எல்லாரையும் சந்தோஷப்படுத்துவோம் அவ்வளோதான்,

நிறைய நல்ல படம் கொடுங்க
அழகான குட்டி கதை சொல்லுங்க
தமிழ் மக்களுக்காக பேசுங்க
தமிழ் நாட்டுக்காக பேசுங்க
உங்கள் குரல் முதல் குரலாக இருக்கட்டும்,


தெருவில் நடுக்குற
கொடுமைய கடக்குற
தலைமுறை படிக்கிற
தமிழில் இருக்குது
பொதுமறை எதுக்குன்னு
விலகுற பழக்கமும் எனக்கில்லே
எப்போதும் என்னோடு இருக்கும்
பட்டாளம் உன்னை உரைக்கும்
கட்டாயம் மண்ணை திரட்டும்
பேதங்கள் இல்லாதிருக்கும்
நாடெங்கள் கண்ணாய் இருக்கும்
இது வர பொறுத்தோம் சும்மா
அடி விழும் இனிமே கும்மா
இது வர பொறுத்தோம் சும்மா
அடி விழும் இனிமே கும்மா
கண்டம் கண்டம் கதறும்டி
நண்டும் சிண்டும் ஒதரும்டி
உள்ள வந்தா பவருடி
அண்ணா யாரு..? (தளபதி)
பிளாக்கு தங்கம் டி
காட்டு சிங்கம் டி
நவுரு டி இது பீஸ்ட் மோட்,


நண்பர் விஜய்ணாக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Related posts

Oh My, GOT!

Penbugs

Vemal volunteers as sanitary worker to help his village

Penbugs

Update on Sarkar

Penbugs

Karnan Review- A Must Watch

Penbugs

பிப்ரவரி 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் 100 % இருக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி

Penbugs

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் | Movie Review

Penbugs

Lives of many millions are in our hands: AR Rahman on COVID-19

Penbugs

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்

Penbugs

மைக்கேல் | குறும்படம் | ஒரு பார்வை

Penbugs

Millions sign petition to shut down PornHub for hosting rape videos

Penbugs

Shruti Haasan opens up about plastic surgery: This is how I choose to live

Penbugs

1st look poster of Muthiah Muralidaran biopic starring Vijay Sethupathi

Penbugs