Penbugs
CinemaInspiring

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் “தளபதி விஜய் “

ஒரு சூப்பர்ஸ்டார்னா எல்லா தரப்பு மக்களையும் திருப்திபடுத்தும் படத்தை தர வேண்டும் . சினிமாவில் இன்று வரை இருக்கும் ஏ ,பி, சி ஆடியன்ஸ் எல்லோரையும் தன் ரசிகராக கொண்டு இருக்க வேண்டும் . தமிழகத்தின் கடைக்கோடி டவுனில் இருக்கும் ஒரு சிறிய திரையரங்கில் மூன்று காட்சிகளும் ஹவுஸ்புல்லாக போக வேண்டும் . இவை அனைத்தையும் தன்னகத்தே கொண்டு இருக்கும் ஒரு நடிகர் தளபதி விஜய் …!

விஜயின் வளர்ச்சியை குறிக்க வேண்டும் என்றால் அது இளைய தளபதியிலிருந்து தளபதியானது வரை குறிப்பிடலாம். அதற்கு அவர் பட்ட கஷ்டங்கள் மற்றும் அவர் போட்ட உழைப்பு மிகவும் அலாதியானது ….!

பக்கா கமர்ஷியல் படம் என்றால் காதல் , நகைச்சுவை , ஆக்சன் ,ஸ்டைலிஷ் என்ற அனைத்து அம்சங்களையும் கொண்டு இருக்க வேண்டும்.மேலே குறிப்பிட்ட அனைத்து வகையிலும் விஜய்யின் முக்கியமான படங்களை பற்றி ஒரு சின்ன ரீவைண்ட் ‌…!

காதல்

பூவே உனக்காக : இந்த படத்திற்கு முன் மசாலா படங்களிலும், அரைகுறை ஆக்‌ஷன் படங்களிலும் அப்பா எஸ்.ஏ.சி.யின் படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்த விஜய்க்கு, இந்தப் படம் ஒரு திருப்புமுனை அதுவும் வெள்ளிவிழாப் படமாக அமைந்தது. ” தோக்கறதுக்கு காதல் ஒண்ணும் பரீட்சை இல்லைங்க ” என்று சொல்லிவிட்டு விஜயின் தனியாக நடந்து போகும் அந்த கிளைமேக்ஸ் தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு கிளைமேக்ஸ் …!

காதலுக்கு மரியாதை : பூவே உனக்காக படத்தின் மூலமாக விஜய் பெற்ற குடும்ப ரசிகர்கள், இன்று வரையிலும் தொடர்ந்து இருக்க காரணம் அதுவும் பெண் ரசிகர்களை விஜய் அதிகமாக கவர்ந்த படம் காதலுக்கு மரியாதை ‌. ஹிட் டைரக்டர் பாசிலும் இசைஞானியும் கை கொடுக்க விஜயின் கிராப் எகிறிய படம் …!

நீ என் மனசுல பெரிய சுமையா இருக்குற. உன்ன பார்த்த நொடியில இருந்தே என் மனசு குத்திக்கிட்டே இருக்கு. நீ விரும்புறனு சொன்னா அந்த வேதனை போய்டும். நீ விரும்பலனு சொன்னா கூட போய்டும். நீ என்ன விரும்புறனு முடிவு பண்ணிடலாமா? விரும்புறியா இல்லையானு சொல்லுனு அந்த அமைதியான விஜய்க்கு மயங்காத பெண்களே தமிழகத்தில் இல்லை எனும் அளவிற்கு விஜயை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்ற படம் ….!

காவலன் : போக்கிரிக்கு பிறகு தனது திரை வாழ்வில் பெரிய சறுக்கல்களை சந்தித்த போது திரும்பவும் தனது டிராக்கை காதல் படத்தை நோக்கி திருப்பினார் விஜய் தொடர்ந்து ஆக்சன் படங்களாக நடித்து சலித்து போன விஜய்க்கு காவலன் ஒரு நல்ல ப்ரெஷ்ஷான ஒரு நடிப்பையும் நல்ல பெயரையும் வாங்கி தந்தது . விஜய்யின் கேரியரை மீண்டும் வெற்றி பாதைக்கு திருப்பிய படம் காவலன் . படத்தில் ஒரு பூங்காவில் அசினிடம் தனது காதலை வெளிப்படுத்தும் ஒரு காட்சியில் அந்த அளவிற்கு ஒரு செட்டிலான விஜயை இயக்குனர் சித்திக் காட்டி இருந்தார் ‌…!

ஆக்சன்

திருமலை : ஆரம்ப காலத்தில் இருந்தே விஜயின் தந்தை அவரை ஒரு ஆக்சன் ஹீரோவாகத்தான் முன்னிலை படுத்த எண்ணினார் அதற்கு ஏற்றவாறுதான் கதைகளையும் தேர்ந்தெடுக்கவும் செய்தார் ஆனால் ஏதோ ஒரு வகையில் அது அவருக்கு வெற்றியை தராதபோது ஒரு பக்கா கமர்ஷியல் படமாக வந்து பெரிய வெற்றியை பெற்ற படம் திருமலை . ஊருக்கு வேணா நீ மாஸா இருக்கலாம் ஆனா எனக்கு முன்னாடி ‌நீ ஒரு‌ தூசு என பஞ்ச அடித்து அதிரி புதிரி பண்ண படம் திருமலை ‌. தற்போதைய மாஸான விஜய்க்கு ஒரு வகையில் அடித்தளம் இட்ட படம் திருமலை ‌…!

கில்லி : திருமலை போட்டு தந்த பாதையில் அடுத்த கட்டத்திற்கு விஜயை முன்னேற்றிய படம் கில்லி ‌. படத்தின் தொடக்கத்தில் இருந்தே வசனங்கள் பட்டாசாக வெடித்தது . ” அப்புல இருக்கிறவன் டவுன்ல வரதும், டவுன்ல இருகிறவன் அப்புல வரதும் ஒன்னும் பெரிசு இல்லை” , ” தம்மாதுண்டு பிளேடு மேல வைக்கிற நம்பிக்கைய உன் மேல வை” போன்ற வசனங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. விஜய்கென்று பெரிய இளைஞர்கள் கூட்டம் உருவானது. தமிழ் சினிமாவின் வசூலில் முதல் ஐம்பது கோடி படம் விஜயின் படமானது ‌. இன்றும் சன் டிவியில் பிரைம் டைமில் போட்டு டிஆர்பி எகிற வைக்கிறது என்றால் கில்லியின் வெற்றி சாதரணமான வெற்றி இல்லை ….!

போக்கிரி : எல்லாருக்குமே ஒரு பீக் பார்ம்ல ஒரு படம் இருக்கும் படம் முழுவதும் சிங்கிள் ஆளா கேரி பண்ணி எடுத்துட்டு போற மாதிரி அப்படிப்பட்ட படம் போக்கிரி ஓபனிங் சீன்ல இருந்து கடைசி எண்ட் வரைக்கும் வெடி வெடி‌ சரவெடிதான் . தன்னுடைய ரசிகர் வட்டத்துக்காகவே இஞ்ச் பை இஞ்ச் தன்னோட மேனரிசம் , டயலாக் டெலிவரினு விஜய் ஒரு சூப்பர் ஸ்டாரா உருவாக்கின படம் போக்கிரி ….!

ஸ்டைல்

நண்பன் : நண்பன் பட ஆடியோ விழாவில் டைரக்டர் சங்கர் சொன்னது ” விஜயை எல்லாருக்கும் பிடிக்கும் இந்த படம் வந்த அப்பறம் விஜயை பிடிக்காதவர்களுக்கும் விஜயை பிடிக்கும் என்று ” அந்த அளவிற்கு ஒரு அழகான விஜயை காட்டி இருந்தது இப்படம் . இந்த படத்திற்கு அப்பறம்தான் இன்னும் அதிகமான ஸ்டைலான விஜயை பார்க்க ஆரம்பித்தோம் ‌…!

துப்பாக்கி : முதல் நூறு கோடி படம் அதோடு மட்டுமல்லாமல் மேகிங்லயும் பட்டையை கிளப்பிய படம் பன்னிரண்டு பேர் சூட்டிங் சீன் விஜயின் ஆக்டிங் , படம் முழுக்க விஜயின் காஸ்ட்யூம் , ஒரு ஸ்டைலான மேனரிஸம் என்று தென்னகத்தின் சூப்பர்ஸ்டாராக விஜய் உருவான படம் ‌…!

கத்தி : கமர்ஷியல் அம்சங்களோடு படத்தின் மைய கதையும் வெயிட்டாக அமைந்த படம் கத்தி . சில படங்கள் இவர் வழியாக வந்தால்தான் அதன் நோக்கம் வெற்றியாக்கப்படும் அந்த வழியில் இந்த கதைக்கு விஜய் என்ற மாஸ் பிம்பம் தேவைப்பட்டது ‌. விஜய் இல்லாமல் இந்த கதை வெற்றி பெற வாய்ப்பே இல்லைனு என்று சொல்லும் அளவிற்கு இரட்டை வேடங்களில் அசத்தலான நடிப்பை மாஸ் மற்றும் கிளாஸோடு தந்து இருப்பார் இளையதளபதி விஜய்….!

சச்சின் : விஜயின் கேரியரில் அவர் ரசிகர்களுக்கும் சரி , அவரை அவ்வளவாக விரும்பாதவர்களும் சரி ரசிக்கும் படம் என்றால் அது சச்சின். படத்தின் ரிலீஸ் தவறாக போனதால் கமர்சியல் வெற்றி பெறாமல் போனாலும் இன்றும் ரீபிட்டாக காண முடிந்த முதல் முறை பார்ப்பதை போலவே ரசிக்க முடிந்த படம் சச்சின் ….!

இது இல்லாமல் முழு காமெடியாக வந்த ப்ரெண்ட்ஸ் , வசீகரா போன்ற படங்கள் விஜயின் ஹ்யூமர் சைடையும் வெளி கொண்டு வந்தன. வடிவேலுடன் இவர் காம்பினேஷன் நூறு சதவீத ஹிட் காம்பினேஷன் .அந்த அளவிற்கு கெமிஸ்ட்ரி அருமையாக இருக்கும் ‌…!

சின்ன பசங்களை முதலில் கவர்வது பாட்டும் டேன்ஸும் தான் இன்று வரை விஜய்யின் கிராப் குழந்தைகளிடத்தில் ஏறிக் கொண்டே போக முதன்மையான காரணம் அவரின் நடன அசைவுகள் அதோடு மட்டுமல்லாமல் அவரின் ஓடாத படத்தில் கூட அனைத்து பாடல்களும் ரசிக்கும்படி இருக்குமாறு பார்த்துக் கொள்வது விஜயின் பெரிய பெரிய பிளஸ் .‌.!

விஜய் நினைத்தால் அத்துணை மெனக்கெடல் இல்லாமல் நடனம் ஆடிவிட்டு போகலாம் ஆனால் தன் ரசிகர்களை திருப்திபடுத்த இந்த வயதிலும் விடா முயற்சியுடன் ஒவ்வொரு படத்திலும் முன்பை விட இன்னும் அழகாக , ஸ்டைலிஷாக ஆடிக் கொண்டே இருக்கிறார்….!

ஆடலுடன் பாடலையும் அவ்வப்போது பாடி தன்னை ஒரு சிங்கராகவும் நிரூபித்து கொண்டிருக்கிறார் விஜய் கூகுள் கூகுளாகட்டும் , வாடி வாடி கை படாத சிடியாகட்டும் லேட்டஸ்டாக வந்த குட்டி ஸ்டோரி பாடல் வரைக்கும் அதிலும் முழு அர்ப்பணிப்போடு இருப்பதால்தான் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது விஜயின் கேரியர் கிராப்….!

நடிப்பினை தாண்டி சமீபத்திய விஜயின் ஆடியோ லாஞ்ச்கள் நம்மை ஈர்க்க ஆரம்பித்துள்ளது ‌. தனது அரசியல் ஆசையை முன்னெடுக்கிறார் விஜய் என்ற விமர்சனம் வந்தாலும் அவரின் பேச்சுகள் பட்டையை கிளப்ப துவங்கியுள்ளன. அதிலும் கடைசி மூன்று ஆடியோ லாஞ்சுகளில் ரொம்பவே கலகலப்பான விஜயை காண்பது மகிழ்ச்சியாக உள்ளது ‌….!

எதை தொட்டாலும் அதில் வெற்றி பெறப் போகும்

“தளபதி விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்”

Related posts

வித்யாசாகர் ஒரு வித்தைக்காரன்..!

Penbugs

மாஸ்டர் டீசர் வெளியானது ; ரசிகர்கள் உற்சாகம்..!

Penbugs

மாஸ்டரின் மாஸ் ரைடு…!

Shiva Chelliah

நெல்சன் இயக்கத்தில் விஜய் தளபதி 65 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு

Penbugs

தேனிசை தென்றல் பிறந்தநாள்…!

Kesavan Madumathy

தந்தை தொடங்கிய கட்சிக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என விஜய் மறுப்பு

Kesavan Madumathy

கொரோனா தடுப்பு பணிகளுக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி

Kesavan Madumathy

என் நெஞ்சில் குடியிருக்கும் தளபதி

Shiva Chelliah

அபூர்வ ராகம் | பத்ம விபூசண் ஜேசுதாஸ்..!

Kesavan Madumathy

Viral video- Warner, Bhuvneshwar Kumar, Rashid Khan dances for Vaathi Coming

Penbugs