Editorial News Editorial News

இறந்த யானையை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய எஸ் ஐ வீடியோ வைரல்

நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஒரு நாப்பது வயதுள்ள யானை ஒன்று சுற்றி வந்தது.அதன் முதுகில் காயம் இருந்தது. இதை பார்த்த வனத்துறையினர் அந்த யானைக்கு கடந்த மாதம் சிகிச்சை தந்தனர்.

உடல்நிலையும் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்தது.இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு அந்த யானையின் காது கிழிந்து ரத்தம் கொட்ட தொடங்கியது.

வலியும் வேதனையும் தாங்க முடியாமல் யானை, அங்குள்ள தண்ணீருக்குள் நின்று அலறியது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த யானையை வனத்துறையினர் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

யானையும் சில நிமிடங்களில் மயங்கி விழுந்துவிட்டது. இதை பார்த்த டாக்டர்களும், வனத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர் அதனை தொடர்ந்து சோதித்த பொழுது யானை பரிதாபமாக இறந்துவிட்டது என தெரியவந்தது.

அப்போது யானையின் தும்பிக்கையை பிடித்து கொண்டு பெள்ளன் கதறி கதறி அழுதார்.அந்த பெள்ளன் என்பவர்தான் அந்த யானைக்கு சிகிச்சையின்போது சாப்பாடு மற்றும் பழங்களை யானைக்கு தினமும் தந்துள்ளார்.

யானை இறந்ததை பார்த்து, “நான் யாருகிட்ட இனிமேல் பழங்களை தருவேன்.. திரும்பி வாடா.. என்னால முடியல… என்னை விட்டு போகாதேடா..” என்ற தும்பிக்கையை பிடித்து கொண்டே இவர் அழுதது அங்கிருந்த மற்ற அதிகாரிகளையும் கண்கலங்க வைத்துவிட்டது.

யானைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்தபோது அப்போதுதான் யானையின் காது பகுதியை பெட்ரோல் வைத்து தீ மூட்டி எரித்ததற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன.மேலும் மேலும் யானை மீது ஆசிட் ஊற்றியும் காயப்படுத்தியிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இந்த காயத்தினால் யானையின் உடலில் இருந்து சுமார் 40 லிட்டர் வரை ரத்தம் வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.

வனத்துறை ஊழியர் பெள்ளன் யானையை பிடித்து கொண்டு அழுத கண்ணீர் வீடியோ இணையத்தில் வைரலாகி, அனைவர் மனதையும் நெகிழச் செய்து‌ வருகிறது.

Related posts

SpaceX successfully launches first crew to orbit

Penbugs

காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் வீர மரணம்..!

Penbugs

Inter-state Bus, train services to be stopped till March 31: CM Edappadi

Penbugs

போர்க் கப்பல் குழுக்களில் முதன்முறையாக இணைந்த பெண்கள்

Penbugs

ஜாதி வாரி கணக்கெடுப்பு – புதிய ஆணையம்

Penbugs

Sillu Karuppati’s Krav Maga Sreeram passes away

Penbugs

Akshay Kumar donates Rs 1 crore for Assam floods

Penbugs

மதிப்பு கூட்டுவரி அதிகரிப்பு : உயரும் பெட்ரோல், டீசல் விலை

Penbugs

Costa Rica becomes 1st Central American country to legalize same sex marriage

Penbugs

Messenger room shortcut now available on Instagram

Penbugs

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் 466 கோடிக்கு மது விற்பனை

Penbugs

Dream 11 IPL- RCB vs KXIP: Fantasy preview

Penbugs

Leave a Comment