Cinema

சைக்கோ | Psycho – Movie Review

ஆல்பிரட் ஹிட்ச்காக் அவர்களின் நினைவாக ஒரு படம் குடுக்க மிஷ்கின் எண்ணினார். அதற்கு ஏற்றார் போலவே இந்த படமும் அருமையாக வந்துள்ளது..!

மிஷ்கின் படங்கள் யாவும் அவர் படிக்கும் புத்தகங்கள் போலவே இருக்கும்..! “சைக்கோ” படமும் ஒரு த்ரில்லர் கதை கொண்ட புத்தகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.. இதில் தனது இயக்குதலின் ஆளுமையை அசாத்தியமான முறையில் வெளிப்படுத்தியுள்ளார்..! படத்தில் நாம் எந்த இடத்தில் Closeup காட்சி வெக்கணும் எந்த எடத்துல மக்களின் மனதை தொடனும்னு அறிந்து தெளிவாக வெச்சிருக்காரு..! தனக்கு தேவையானது மட்டும் இளையராஜாவிடம் இருந்து பெற்றது படத்தின் கூடுதல் பலம்..!

இளையராஜாவின் இசை தான் “சைக்கோவின் ஆன்மா” ஆக படம் முழுதும் வியாபித்து இருக்கும்..! படத்தின் மூன்று பாடல்களும் ஏற்கனவே நம் நெஞ்சை வருடி இருந்தாலும் திரையில் படத்துடன் பார்க்கும் நம் பதைபதைத்த மனதையே உருக செய்தது..! சிறிது நேரம் கண்ணை மூடி விட்டு படத்தின் பின்னணி இசையை கேட்டாலும்.. அந்த இசையின் மூலம் உங்களால் படத்தின் வீரியத்தையும் கருணையையும் உங்களால் உணர முடியும் அதுவே ராஜாவின் இசை…!

தன்வீர் இவர்தான் படத்தின் முக்கிய பங்கை அளித்தவர்..! எந்த இடத்தில் கேமரா நகரணுமோ அங்க மட்டும் நகர்த்தி படத்தை மெதுவாக கடத்தி செல்கிறார்..! சில படத்துல கேமரா நகரும் ஆனா இந்த படத்தில் கேமராவின் உள்ளே இருக்கும் கதாபாத்திரங்கள் மட்டுமே நகர்கிறது அதுவே படத்தின் உயிரோட்டமாக திகழ்கிறது..!

கலை – படத்தில் கலை வடிவமைப்பு அழகாக இருந்தாலும்.. ஆங்காங்கே அவர்கள் வைத்திருக்கும் கலை சார்ந்த விஷயங்கள் தெளிவாக தெரிகிறது..!

எடிட்டிங் படத்தில் நேர்த்தியாக இருந்தது… படத்தின் சாராம்சத்தை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை..!

இதெல்லாம் ஓரமா வெச்சிட்டு நடிகர்கள் கிட்ட போவோம்..!
மொதல்ல…
உதயநிதி ஸ்டாலின் (கௌதம்) – தனக்கான பாணியில் இருந்து கதைக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டு உண்மையான பார்வையில்லா மனிதரை போல நடித்துள்ளார்.. காதலிக்காக எதையும் செய்ய துணியும் காதலனாக கண் பார்வையின்றி காதலுக்கு பார்வைய அளித்துள்ளார்..!

நித்யா மேனன்(கமலாதாஸ்) – படம் முழுவதும் தனது கோபத்தினால் அந்த கதாபாத்திரதிற்கு உயிர் தந்துள்ளார்..!

அதிதி ராவ் ஹைத்ரி( தாகினி) படத்தில் தாகினி எனும் கதாபாத்திரத்தில் அழகாகவும் கருனையுள்ளம் கொண்டவளாகவும் காட்சியளிக்கிறார்..!

அதை தான்டி தமிழ் சினிமாவின் இரு இயக்குனர்கள் தங்களின் பங்கை சிறப்பாக அளித்துள்ளனர் ஒன்று ராம்..! இரண்டாவது சிங்கம் புலி.. இருவரும் படத்தில் தூண்களாக இருக்கிறார்கள்..! பவாசெல்ல துரை மற்றும் ரேணுகா அவர்களும் தம்தம் பணியை சரிவர செய்துள்ளனர்..

இப்போ தான் படத்தின் ரியல் சைக்கோ வராரு..!

அங்குலி மால் – படத்தில் நிர்வாண காட்சிகளில் தத்ரூபமாக நடித்து அசத்தியுள்ளார்.. அமைதியான மற்றும் ரொம்பவும் வெறித்தனமான வில்லனாகவும்.. அவரின் நடிப்பாற்றலுலையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.. அவர் வரும்போதெல்லாம் சில காட்சிகளில் பயமுறுத்துகிறார்..!

இந்த மாதிரியான ஒரு ராவான படத்தை தயாரிக்க முன்வந்தது ஆச்சரியம் அளிக்கிறது.. இது போன்ற ஒரு கொடூரமான கதைக்களம் கொண்ட படங்களை தயாரிக்க முன்வந்தது Double Meaning Production குழுமத்திற்கு பாராட்டுக்கள்..!

புத்தர் வாழ்ந்த காலத்தில் அங்குளிமால் எனும் அரக்கன் இருந்தான்.. அவன் கொடியவணாக எல்லாரையும் அழிப்பவனாக இருந்தான்.. அவனை புத்தர் சந்தித்தவுடன் அவன் மனம் மாறி நல்லவனாக அவரிடமே சிஷயனாக இருந்து இறந்து போனது வரலாறு..! அதை ஒத்தமாதிரியாக படம் அமைக்கப்பட்டிருக்கிறது..!

சைக்கோ ஒரு த்ரில்லர் மற்றும் காதல் கலந்த அருமையான முறையில் மிஷ்கினால் எழுதப்பட்ட புத்தகம் எனலாம்..!

Related posts

In Pictures: Success Meet | Psycho Movie Team

Penbugs

Asuran | Review

Penbugs

Happy Birthday, Surya!

Penbugs

Thank you, Chi La Sow

Penbugs

The first look of Atlee’s next with Vijay released

Penbugs

Money Heist director Alex Rodrigo says Vijay would be suitable for Professor

Penbugs

21 years of சேது | விக்ரம்’s “Chiyaan”

Kesavan Madumathy

Mafia Chapter 1: Review

Penbugs

குக் வித் கோமாளியின் கிராண்ட் பைனல் முடிவுகள்

Kesavan Madumathy

Sandakari trailer- Vemal and Shriya Saran stars in what looks like a fun ride

Penbugs

மாஸாக வெளியான வக்கீல் சாப் டிரைலர்

Penbugs

Kangana Ranaut shares stunning ‘Thalaivi’ look

Penbugs