Penbugs
Cinema

திருடன்கள் இல்லாத சாதி இருக்கா ? வைரலாகும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ பட டீசர்

2டி நிறுவனம் சார்பாக சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், உடன் பிறப்பே, ஜெய் பீம், ஓ மை டாக் ஆகிய படங்கள் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி மாதம் ஒரு படமாக அமேசானில் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் சூர்யா நடிக்கும் ஜெய் பீம் பட டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

பழங்குடி மக்களின் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தின் டீஸர் வெளியானது!

ஜெய்பீம் படத்தின் டீசரில்

’பாதிக்கப்பட்டவங்களுக்கு மறுக்கப்பட்ட நீதி அவங்களுக்கு நடந்த அநீதியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்’,

‘இந்த சாதில இருக்கவங்க திருட்டு கேஸில் கன்வெர்ட் ஆகுறது ரொம்ப சகஜம் சார்’…

‘திருடன் இல்லாத சாதி இருக்கா நட்ராஜ்’.. உங்க சாதி என் சாதின்னு எல்லா சாதிலும் பெரிய பெரிய திருடன் இருக்காங்க’

போன்ற வசனங்கள் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கின்றன.

Related posts

ஜெய் பீம் திரைப்பட விமர்சனம்

Kesavan Madumathy

சூர்யாவின் 39வது படம் ஜெய்பீம்

Kesavan Madumathy

Taanakkaran [2022]: A realistic, empathy-filled portrayal of cop drama

Lakshmi Muthiah

Jai Bhim: An earnestly arresting drama that spins an epic

Lakshmi Muthiah

Leave a Comment