Penbugs
CricketIPL

மீண்டு(ம்) வா!

இந்த உலகத்துல நடக்குற ஒவ்வொரு
நல்லதுக்கும் கெட்டதுக்கும் ஏன் ஒவ்வொரு
அசைவின் பின்னணிலையும் ஒரு காதல் இருக்கு,

அந்த காதல் எது மேல வேணாலும் வரலாம்,

பெண் மேல – பொன் மேல
பதவி மேல – புகழ் மேல
மது மேல – மதத்து மேல எக்ஸட்ரா எக்ஸட்ரா

ஆனா, அவருக்கு..?

He Loves Batting
He Just Loves Batting,

அது என்னமோ தெரியல
அவர் கிரவுண்ட்குள்ள இறங்கிட்டா
அன்னக்கி சும்மா அதகளம் தான்,

தன்ன எதிர்த்து பேசுறவன் எவளோ பெரிய
ஐட்டங்காரனா இருந்தாலும் பிசிறு தட்டாம
அவன சம்பவம் செஞ்சா தான் அன்னக்கி
ராத்திரி இவருக்கு தூக்கம் வரும்,

என்ன நீ எதிர்க்கணும்ன்னு நினைச்சாலே
உன் அப்பனுக்கும் சேர்த்து பாடத்தை
புகட்டுவேன்னு சொல்லாம சொல்லுவார்
தன்னோட அதிரடி பேட்டிங் மூலமா,

வலி அது தான் உயிர் பிழைக்கும் இதுவரை
இயற்கையின் விதி இது தான் – ன்னு
நா.முத்துக்குமார் எழுதுன வரி இவருக்கு
நல்லாவே பொருந்தும்ன்னு சொல்லுற அளவு,

நீ என்ன வலி எனக்கு அன்னக்கி விதைச்சியோ
அத விட ஒரு படி மேல எதிர்த்தவனுக்கு உள்ள
சுருக்குன்னு இறங்குற மாதிரி வலிய திருப்பி
கொடுப்பார்,

சில நேரத்துல அவருக்குள்ள இருக்க
ரௌத்திரம் வெளிய வரும் அப்போ
சும்மா கில்லியா சொல்லி வச்சு அடிப்பார்,

வரப்போற T20 உலகக்கோப்பை மற்றும்
நடப்பு ஐ.பி.எல் க்கு அப்பறம் தன்னோட
கேப்டன்சில இருந்து விலக போறது
ரொம்பவே அவரோட ரசிகர்களுக்கு
பெரிய அதிர்ச்சி தான், ஆனாலும் ஒரு
வீரனுக்கு லைஃப்ல சரிவுன்னு வரப்போ
அதை ஏற்றுக்கொண்டு தானே ஆகவேண்டும்,

அதே போன்று ஐ.பி.எல் என்று வரும் போதும் சரி,
ஐ.சி.சி செமி ஃபைனல் மேட்ச்களிலும் சரி,
பல அவமானங்களை அவர் இன்றும் சந்தித்து
கொண்டு தான் இருக்கிறார் இங்கு மன ரீதியாக,

அவமானங்கள் தான் மனிதனுக்கு நிறைய பாடத்தை
கற்று தரும்ன்றது நம்ம எல்லாருக்கும் தெரியும் தானே,

அவரும் மனிதன் தானே சில நேரங்களில்
தோல்வி அடைய தான் செய்வார் அவரும்,
தோல்விகளையும் சறுக்கல்களையும் சந்திக்காத
மனுஷன் யாருமே இங்க இல்லையே அப்பறம்
விராட் மட்டும் அதுல விதிவிலக்கா என்ன ஹ்ம்ம்,

வெற்றி மட்டுமே வாழ்க்கை இல்ல நண்பா
ஒரு நாள் ஜெயிப்பார் அன்னக்கி
ஒரு சாம்ராச்சியம் அவருக்கு கீழ நடக்கும்
பாருங்க சும்மா வெறியா,

சொன்னாலும் சொல்லாட்டியும்
இப்போ இருக்க கிரிக்கெட் அத்தியாயத்துல
அவர் ஒரு தனிக்காட்டு ராஜா தான்,

கம்பேக் இன்னிங்ஸ் அப்போ ஊருக்குள்ள
பட்டாசு சத்தம் ஹெவியா கேட்கணும் சேம்ப்,

Picture Courtesy: IPL – Indian Premier League Official Twitter

The Rise of Aggression | The Rise of Virat Kohli !!!

Related posts

விராட் கோலி – அனுஷ்கா சர்மாவிற்கு பெண் குழந்தை பிறந்தது

Kesavan Madumathy

கோலி, தோனி ஆகியோரில் தோனியே சிறந்த கேப்டன்: தவான்,

Kesavan Madumathy

Your reflexes have slowed down, need to practice more: Kapil Dev on Virat Kohli

Penbugs

You are letting the team down: Kohli to RCB members on breaching bio-bubble protocol

Penbugs

Won’t comment; Don’t have total knowledge: Virat Kohli on CAA

Penbugs

What it is like to be Rohit Sharma fan? – Test version

Gomesh Shanmugavelayutham

Watch: Virat Kohli wins hearts by asking fans to stop booing Steve Smith!

Penbugs

Watch: Virat Kohli imitates Harbhajan Singh’s bowling action

Penbugs

Virat Kohli-Anushka Sharma announces pregnancy

Penbugs

Virat Kohli’s rage is his fuel!

Penbugs

Virat Kohli turns Santa Claus to surprise kids in shelter home

Penbugs

Virat Kohli to step down as RCB captain after IPL 2021

Penbugs

Leave a Comment