Coronavirus

சாதித்த ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் ; கொரோனா மருந்து பரிசோதனை வெற்றி

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்றும், எதிர்ப்புசக்தியை உருவாக்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் 9 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு இங்கிலாந்து ஒப்பந்தம் செய்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பரிசோதனையில் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை உருவாக்கியது. இந்த தடுப்பூசி முதற்கட்ட சோதனைக்காக கடந்த ஏப்ரல் மாதம் 1077 பேருக்கு செலுத்தப்பட்டது.

இந்த சோதனையில், மருந்து செலுத்தப்பட்டவர்களுக்கு எத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது என்பதும் ஆராயப்பட்டது.

இதேபோல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனகா கண்டுபிடித்த அடெனோ வைரல், லண்டன் இம்பீரியல் கல்லூரி மற்றும் பிவிட்சர் நிறுவனம் கண்டுபிடித்த எம் ஆர் என் ஏ தடுப்பு மருந்து மற்றும் வால்னெவா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து ஆகிய 3 மருந்துகளும் பாதுகாப்பானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், ஒரு சிலருக்கு காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற லேசான பக்கவிளைவுகளே இருந்ததாகவும், அதுவும் சரி செய்யக் கூடிய அளவிலேயே இருப்பதாகவும் பல்கலைக்கழக ஜென்னர் நிறுவன இயக்குநர் அட்ரியன் ஹில் தெரிவித்துள்ளார்.

தொற்றுநோயைத் தடுக்கும் மூலக்கூறுகளில் நடுநிலையான ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன் உடலின் டி-செல்களில் எதிர்வினையை இந்த தடுப்பூசி ஏற்படுத்துவதாகவும், இந்த செல்கள் கொரோனா வைரசை எதிர்த்துப் போராட உதவுவதாகவும் அட்ரியன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த மேற்கண்ட மூன்று நிறுவனங்களுடன் இங்கிலாந்து அரசு 9 கோடி கொரோனா தடுப்பு மருந்து வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் அலோக் வர்மா தெரிவித்துள்ளார்.

Related posts

நாடு தழுவிய அளவில் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகளை அளித்து மத்திய அரசு அறிவிப்பு

Penbugs

அன்புள்ள பிரதமர் மோடிக்கு.. மன்மோகன்சிங் கடிதம்

Kesavan Madumathy

திரையரங்குகளில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி

Penbugs

செய்யூர் திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

தமிழகத்தில் இன்று 6005 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் இன்று 3509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

Penbugs

குடும்பத்துடன் இணைந்தார் நடிகர் பிரித்விராஜ்

Kesavan Madumathy

ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Penbugs

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்

Kesavan Madumathy

கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 61.13 சதவீதமாக ஆக உயர்வு

Penbugs

Cannot dilute COVID protocols: Central asks TN Govt to follow 50% theatre occupancy

Penbugs

Leave a Comment