Penbugs
CricketMen Cricket

தலைவன் ஒருவனே…!

தமிழில் “தோணி” னா தண்ணீரில் தள்ளாடுபவர்களை கரை சேர்க்கும் ஒண்ணு. அதே கிரிக்கெட்ல “தோனி” என்றால் அணி எப்பெல்லாம் இக்கட்டான நேரத்தில் தள்ளாடுதோ அப்பலாம் அணியை கரை சேர்க்க போராடும் ஒரு மாவீரன் …!

தோனி… இந்த பேர் கேட்டாலே ஒரு சந்தோஷம் தான் எப்பவும் ஏன்னா தோனியின் வளர்ச்சியை படிப்படியாக பார்த்து வளர்ந்த கூட்டத்தில் ஒருத்தன் நான் …!

தொண்ணாறுகளின் இறுதியில் இந்திய அணியில் ரொம்பவே டெக்னிகல் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமா இருந்த நேரத்தில் இந்த கிரிக்கெட் புக் ஷாட் பத்திலாம் கவலைப்படாமல் இறங்கி அடிச்ச ஒரு ஆளு தோனி அதுதான் அவர் மீதான முதல் ஈர்ப்பு …!

தோனி முதல் சதமடித்த மேட்ச்சை விட 183 ரன் அடிச்ச மேட்ச் ரொம்பவே ஸ்பெஷல், அப்பலாம் டாஸ் வின் பண்ணி முந்நூறு ரன் அடிச்சிட்டா அவங்கதான் வின் என்ற எழுதப்படாத சட்டம் போல இருக்கும் இலங்கை நல்ல ஒரு பெரிய ஸ்கோர் அடிச்ச உடனே மேட்ச் அவ்ளோதான் என்று நினைச்சிட்டு இருக்கும்போது புயல் மாதிரி ஒருத்தர் வந்து பந்துகளை நாலாபுறமும் சிதறடிச்சார்…!

அடுத்து தோனியின் சதத்தில் மறக்க முடியாத மேட்ச் சென்னை 2012ல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான மேட்ச். முதல் பத்து ஓவர் முடிவில் 29 ரன்னுக்கு 5 விக்கெட் மிஞ்சிப்போனா ஒரு 120 ரன் வரை போகலாம் அது கூட ரொம்பவே கவனமா ஆடினா மட்டும்தான் என்று நினைச்சா, தோனி அப்பதான் தன்னுடைய மேஜிக்கை காட்டினார் முதலில் தன்னுடைய விக்கெட் எவ்ளோ முக்கியம் என்று தெரிஞ்சு ரொம்பவே கவனமா விளையாடினார். இறுதிகட்டத்தில் வழக்கமான அதிரடி ஆட்டம் 113 ரன் 125 பந்துகளில் இந்திய அணியின் ஸ்கோர் 227/6 …!

தோனி நினைச்சி இருந்தா தன்னுடைய பேட்டிங் பொசிசன் டாப்லயே வைச்சி இருந்து இருக்கலாம் ஆனால் தன்னுடைய தனிப்பட்ட சாதனையை விட அணிக்கு என்ன தேவையோ அதை மட்டும்தான் செஞ்சார்…!
தோனி குறித்தான நினைவுகளில் ரொம்ப வியக்கத்தக்க விசயம் என்னனா தோனி ஒன்றும் முதல் தர போட்டிகளில் கேப்டனாக இருந்தது இல்லை ஒரு விபத்து மாதிரி வந்த தன்னிடம் வந்து சேர்ந்த கேப்டன் பொறுப்பை ஒரு‌ மனுசன் இந்த அளவிற்கு வெற்றிகரமா பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்பதே …!

தோனி, ஒரு பிளேயரா பல பேரை வியக்க வைச்சி இருக்கலாம், ஆனால், ஒரு நல்ல தலைவனா அவரை‌ கண்டு வியந்த பல பேர்களில் நானும் ஒருவன். கிரிக்கெட் என்பது வெறும் உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாக வைத்து விளையாடும் விளையாட்டு இல்லை; அது ஒரு மைண்ட் கேம். எதிரணி வீரர், கேப்டன் எப்படி யோசிப்பார் என யோசிச்சு முடிவு எடுக்கனும். அதில் ஜெயிச்சா போதும் மிச்சமெல்லாம் தானா நடக்கும்..!

தோனி அடிக்கடி கூறும் வார்த்தை “The process is more important than the result, a result is byproduct of your process” இந்த பிராசஸ் கடைசிவரை அவர் பண்ணிட்டு இருக்கார் அணி தேர்வு ஆகட்டும் , எடுக்கும் முடிவுகள் ஆகட்டும் எல்லாமே ஒரு காரணத்தோடுதான் இருக்கும்…!

தோனி சந்தித்த விமர்சனங்கள், எதிர்வினைகள் அதிகம் சொந்த நாட்டில் இவ்ளோ எதிர்ப்பும் இவருக்குதான் ஆனாலும் அனைத்தையும் அமைதியாக கடந்து போறதுதான் தோனியின் ஸ்டைல்…!

சொந்த நாட்டிலயே இவ்ளோ எதிர்ப்பு வர காரணம் அவங்க ,அவங்க ஃபேவரைட் பிளேயர்ஸ் டீமை விட்ட போக காரணமே தோனிதான் நினைச்சிட்டு இருக்காங்க ,
முதல் விசயம் அவங்க ஆட்டத்திறன் குறைஞ்சது கடைசிவரை ஒத்துக்க மாட்டாங்க , இரண்டாவது விசயம் ஒரு கேப்டன் எப்பவுமே தனக்கான அணியை அவனேதான் முடிவு பண்ணனும் வெற்றியோ தோல்வியோ அது அவரின் சுதந்திரம் ..!

ஒரு லெஜன்ட் பிளேயரை வேண்டாம் சொன்ன உடனே அப்படியே சாதரணமாக தூக்கி போட கிரிக்கெட் வாரியம் ஒண்ணும் சாதரண அமைப்பு இல்ல அவங்களும் நல்லா கலந்து ஆலோசிட்டுதான் முடிவு எடுப்பாங்க.
சரி வயதை காரணமா வைச்சி தோனியை ஏன் வெளிய அனுப்பலனு கேக்கலாம் இங்க வயது முக்கியமில்லை பிட்னஸ்தான் முக்கியம் இந்த வயசுலையும் சின்ன பசங்களுக்கு போட்டியா தன் பிட்னஸை வச்சி இருக்கார் அந்த ஃபிட்னஸ் அந்த அந்த பிளேயர்ஸ் எல்லாம் வைச்சி இருந்தா கண்டிப்பாக வெளிய போய் இருக்க மாட்டாங்க …!

தான் தலைமையேற்று வழிநடத்திய அதே அணியில் ஒரு சாதரண வீரராக இருக்க யாருக்கும் மனம் ஒத்து கொள்ளாது தான் என்ற ஈகோ கண்டிப்பா எவ்ளோ பெரிய மனுசனுக்கும் இருக்கும், ஆனா தோனி அந்த ஈகோவைலாம் கடந்து விராட் கேப்டன் ஆகும்போது அவருக்கு பக்கதுணையாக கூட இருந்தது, அவரின் தலைமைப் பக்குவத்தையும் காட்டுகிறது , எப்பொழுதுமே தான் கொண்ட முடிவில் உறுதியாக இருப்பதுதான் தோனி…!

இதுக்கு அப்பறம் தோனியை விட பெஸ்ட் ப்ளேயர் வர்லாம் ,பெஸ்ட் கீப்பர் கூட வர்லாம் (சும்மா டிரை பண்ணி பாக்கட்டும்) ஆனா அவரை மாதிரி ஒரு தலைவன் கண்டிப்பாக வரவே முடியாது..!

பாகுபலி மொமண்ட்லாம் படத்துல மட்டும் நடக்குமுனு நினைச்சிட்டு இருந்தா பிண்ணனி இசையா மக்களின் குரல், கெத்தா ,மாஸா ஒரு சின்ன புன்சிரிப்போட மனுசன் சென்னை களத்துல இறங்கும்போது ஒரு புல்லரிப்பை ஏற்படுத்தும் பாருங்க அது தோனியின் ரசிகர்களுக்கே உரித்தான கர்வம் …!

சென்னையில் நெட் பிராக்டீஸ் பண்ண தோனி களத்துக்கு வர்ற‌ வீடியோ ஒண்ணு இருக்கும் எத்தனை முறை பார்த்தாலும் அந்த மாஸ் குறையவே குறையாது …!

தோனி எப்ப வேணா தன்னுடைய ஓய்வை அறிவிக்கலாம் அதை ஏற்றுக் கொள்ளும் மனத்திடத்துடன்தான் அந்த அறிவிப்புக்காக காத்திட்டு இருக்கேன் நன்றி தோனி உங்களின் நினைவுகள் இருக்கு எப்பவும் …!

நான்லாம் கிரிக்கெட் பார்க்க காரணமே சச்சின்தான் அவரே தோனியை பத்தி என்ன சொல்லி இருக்கிறார் என்றால்

“He is the best captain I have played under. He is very sharp and always alert. He reads the situation well and is open to sharing ideas. He always has discussions with bowlers, batsmen and senior players separately.”

” நேற்று இல்லை நாளை இல்லை எப்பவுமே தோனி ராஜாதான் “

Related posts

‘Surprised how MSD middled almost every ball’: Jharkhand’s coach

Penbugs

போட்டியைக் கணிப்பதில் பாண்டிங்கை விட தோனி வல்லவர்” – மைக்கல் ஹஸி கருத்து !

Penbugs

தோனி ஒரு அதிரடி கேப்டன் – ஸ்ரீசாந்த் பேட்டி…!

Penbugs

தோனி உடற்தகுதி உள்ளவரை தொடர்ந்து விளையாட வேண்டும் – கம்பீர்

Penbugs

தலைவன் ஒருவனே..!

Kesavan Madumathy

தலைவன் ஒருவனே – இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோனி

Kesavan Madumathy

டி வில்லியர்ஸின் ஆல்-டைம் ஐபிஎல் லெவன்: எம்எஸ் டோனி கேப்டன்

Kesavan Madumathy

சென்னை அணியில் கொரோனா பாதிப்பு

Penbugs

சரித்திர நாயகன் தோனி …!

Kesavan Madumathy

கோலி, தோனி ஆகியோரில் தோனியே சிறந்த கேப்டன்: தவான்,

Kesavan Madumathy

கலியுக தர்ம யுத்தம்!

Shiva Chelliah

ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

Penbugs