Penbugs
CricketMen Cricket

சரித்திர நாயகன் தோனி …!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஏன் உலக கிரிக்கெட் வரலாற்றிலயே பெயர் நீடித்து இருக்க போகும் ஒரு கேப்டன் என்றால் அது மகேந்திர சிங் தோனி…!

2013 சாம்பியன் டிராபி தோனியின் வெற்றி மகுடத்தில் ஒரு ரத்தினக்கல் ..!

அன்று கிடைத்த வெற்றியின் மூலம், ஐசிசியின் அத்தனை முக்கிய சாம்பியன் பட்டங்கள் அனைத்தையும் வென்ற ஒரே கிரிக்கெட் கேப்டன் என்ற பெயரை தோனி பெற்றார்….!

லீக் போட்டிகளில் இருந்து இந்திய அணி மிக எளிதாக இறுதி போட்டிக்கு முன்னேறியது . அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் சிறப்பான பங்களிப்பு அதற்கு ஒரு முதன்மை காரணம் …!

இறுதி போட்டி இங்கிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது மழையின் காரணமாக இருபது ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது …!

வேகமாக வீசிய காற்று மற்றும் தட்பவெப்பம் காரணமாக இந்திய வீரர்களால் பெரிய அளவில் அடித்து ஆட முடியவில்லை….!

மேலும் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ரவி போபரா இந்தியாவின் முக்கிய விக்கெட்களை வேறு துரித நேரத்தில் வீழ்த்தினார் . அவர் 4 ஓவர்கள் வீசி அதில் 3 விக்கெட்களைச் சாய்த்தார்…!

இருந்தும் இந்திய வீரர்களில் விராட் கோலியும் , பின்கள வீரரான ரவீந்திர ஜடேஜாவும் சூழலை ஓரளவு சிறப்பாக சமாளித்து சிறப்பாக ஆடி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை குவித்தது…!

பின்னர் துவங்கிய இந்தியாவின் பந்து வீச்சினை ஆரம்பம் முதலே சிறப்பாக சமாளித்து சேஸிங்கை துவங்கினர் இங்கிலாந்து வீரர்கள். சீராக விக்கெட்கள் ஒருபக்கம் விழுந்து கொண்டிருந்தாலும் மறுபக்கம் வெற்றிக்கு மிக அருகில்தான் இருந்தது இங்கிலாந்து ….!

ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வினின் பந்து வீச்சுதான் ஆட்டத்தை திசை திருப்பியது. முக்கியமான விக்கெட்களை முக்கியமான நேரத்தில் இரு ஸ்பின்னர்களும் எடுத்தனர்…!

இந்த இடத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தோனி செய்த இரண்டு ஸ்டம்பிட்டும் தோற்க வேண்டிய போட்டியை , வெற்றியை நோக்கி திருப்பிய மொமண்ட்கள்….!

அதே சமயத்தில் இங்கிலாந்தின் வெற்றியை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவியவர்கள் ரவி போபராவும், இயான் மார்கனும்தான். இருவரும் அதிரடியாக ஆடி வந்ததால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியாகவே இருந்தது.ஆனால் இந்த இருவரையும் அடுத்தடுத்து இஷாந்த் சர்மா அவுட்டாக்கி போட்டியை முழுவதும் இந்தியா பக்கம் திருப்பினார் …!

இஷாந்த் சர்மா வீசிய அந்த ஓவரை அப்பொழுது அவருக்கு தோனி தருவார் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் அதற்கு முன் சரியாக பந்து வீசாத இஷாந்த்திடம் பந்தினை வழங்கின உடன் கமெண்டரியில் இருந்து விமர்சகர்கள் கூட ஆச்சரியப்பட்டனர். ஆனால் வழக்கம்போல் தோனி தனது தேர்வு சரியென்று நிரூபித்து காட்டினார்….!

இறுதி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. அஸ்வின் பந்து வீசினார் , அஸ்வின் வீசிய அற்புதமான பந்து வீச்சால் இங்கிலாந்தின் ரன் குவிப்பு தடைப்பட்டு இந்தியா வெற்றி பெற்றது ‌….!

பதினெட்டு பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் அணியை பதட்டப்படாமல் வழி நடத்தி சென்று ,சிறப்பானதொரு பீல்டிங் வியூகத்தை உருவாக்கி எதிரணியை திக்குமுக்காட செய்த தோனியின் கேப்டன்ஷிப் எப்பொழுதும் நினைவில் இருக்கும் போட்டியாக இது அமைந்தது …!

இந்தியாவின் ஷிகார் தவன் சிறப்பான பேட்டிங்குக்காக தங்க பேட்டைப் பரிசாகப் பெற்றார். அவர் இத்தொடரில் 363 ரன்களைக் குவித்து முதலிடத்தைப் பிடித்தார்….!

வெற்றி குறித்து தோனி கூறியது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று

“we are the No. 1-ranked team, let’s play like that’. I knew the two-overs of Powerplay were crucial. I wanted to make them slog off the spinners. They all handled the pressure really well, in international cricket people talk about technique but it’s the ones that deal with the pressure.”

Related posts

‘Surprised how MSD middled almost every ball’: Jharkhand’s coach

Penbugs

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஐந்து கோடி ரூபாய் போனஸ்..!

Penbugs

வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும் – நடராஜனுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

Penbugs

விரல் வித்தைக்காரனின் வியூகம்

Shiva Chelliah

வங்காளதேச கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு; ஐ.சி.சி. அறிவிப்பு

Penbugs

போட்டியைக் கணிப்பதில் பாண்டிங்கை விட தோனி வல்லவர்” – மைக்கல் ஹஸி கருத்து !

Penbugs

பேட்ட பராக்!

Shiva Chelliah

பழனி முருகன் கோயிலில் மொட்டையடித்த நடராஜன்

Penbugs

தோனி புதிய இந்தியாவின் அடையாளம்-பிரதமர் மோடி

Penbugs

தோனி ஒரு அதிரடி கேப்டன் – ஸ்ரீசாந்த் பேட்டி…!

Penbugs

தலைவன் ஒருவனே…!

Kesavan Madumathy

தலைவன் ஒருவனே..!

Kesavan Madumathy