Coronavirus

கொரோனா நோய் பரவலை தடுக்க அம்மனுக்கு நாக்கை காணிக்கையாக கொடுத்த வாலிபர்.

கொரோனா பரவலை தடுப்பதற்காக வாலிபர் ஒருவர் தன்னுடைய நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கின் காரணமாக வெளி மாநிலத்துக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் இருக்கும் பவானி மாதா கோவிலில் சிற்ப பணிகளில் சிலர் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொழிலாளர்களில் ஒருவர் விவேக், இவர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த சனிக்கிழமை தனது சக நண்பர்களிடம் சந்தைக்கு சென்று வருவதாகக் கூறி அங்கிருக்கும் நாதேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.அங்கு அவர் நாக்கு அறுபட்ட நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து உடனடியாக கோவில் பூசாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக விவேக் தன்னுடைய நாக்கை அம்மனுக்கு காணிக்கையாக கொடுக்க வேண்டிக்கொண்டு இவ்வாறு அறுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

Related posts

COVID19: Karan Johar to self isolate after 2 staffs tested positive

Penbugs

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

ஆப்பிள் மற்றும் 13 நிறுவனங்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய தமிழக முதல்வர் கடிதம்

Anjali Raga Jammy

Yashika Aannand birthday celebration: Fans arrange blood donation campaign

Penbugs

Trichy: Police helps pregnant woman deliver baby by donating blood

Penbugs

Make challenging wickets: Dravid on saliva ban

Penbugs

செய்யூர் திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

மே 15-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரூ 2000 நிவாரணம்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3861 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

9YO sends ‘happiness’ puzzle to cheer the Queen, receives Thank you note

Penbugs

5ம் தேதி முதல் இலவச முகக்கவசம் அளிக்கப்படும் – அமைச்சர் காமராஜ்

Penbugs

அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Kesavan Madumathy