Penbugs
Editorial News

லீ மெரிடியன் ஹோட்டல்களை வாங்கியது எம்ஜிஎம் ஹெல்த் கேர்

சென்னை கிண்டி மற்றும் கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டல்கள் விரைவில் எம்ஜிஎம் ஹெல்த் கேர் குழுமத்தின் வசமாகின்றன‌.

அப்பு ஹோட்டல்ஸ் லிமிடெட் சென்னை கிண்டி மற்றும் கோவை ஆகிய இடங்களில் லீ மெரிடியன் ஓட்டல்களை நடத்தி வந்தது.

அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் இந்திய சுற்றுலா நிதிக் கழகத்திற்கு சுமார் ரூ.18 கோடி நிலுவை தொகை வைத்து இருந்தது. இந்த தொகை 2019ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் வாராகடனாக அறிவிக்கப்பட்டது.

அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் நிலுவை தொகையை செலுத்தும் நிலை இல்லை என கூறியதால், இந்திய சுற்றுலா நிதி கழகம் திவால் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் குழுமத் தலைவர் எம்.கே. ராஜகோபாலன் சமர்ப்பித்த ரூ.423 கோடி மதிப்புள்ள கையகப்படுத்தும் தீர்மான திட்டத்திற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலை மருத்துவமனையாக மாற்ற திட்டமிட்டுள்ள எம்ஜிஎம் கோவையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலை சீரமைத்து நட்சத்திர ஹோட்டலாகவே தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

வாட்ஸ்அப் மூலமும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறலாம்: புதிய வசதி அறிமுகம்

Penbugs

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

ரெம்டெசிவிர் மருந்து வினியோக மையம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம் – தமிழக அரசு தகவல்

Kesavan Madumathy

ரூ.3000 கோடி உடனடியாக தேவை-பிரதமரிடம் முதலமைச்சர் வேண்டுகோள்

Penbugs

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

ராயபுரம், தண்டையார்பேட்டையில் 70% பேர் குணம்

Penbugs

மே 1 முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி

Kesavan Madumathy

மெரினா செல்ல இன்று முதல் அனுமதி

Penbugs

முதல்வர் ஸ்டாலினிடம் ரூ5 லட்சம் நிதி கொடுத்த நடிகர் வடிவேலு

Penbugs

Leave a Comment