Penbugs
CricketIPLMen Cricket

சந்தீப் ஷர்மா – ஸ்விங் சாணக்யன்

இந்த காப்பு போட்டவன் மட்டும் தான்
அடிப்பானா என்ன..? நான் கொஞ்சம்
ஸ்விங்ல சொருகுவேன் சார்ன்னு யாரும்
பெரிதாக எதிர்பார்க்காதவராக தனி
ஒருவனாக விக்கெட்ஸ்,எகானாமிக்கல் –
ன்னு சைலண்ட்டா சம்பவம் செஞ்சுட்டு
இருக்காரு இங்க ஒருத்தர்,

பஞ்சாப் டீம்ல இருந்தப்போ நல்லா
பௌலிங் போட்டும் நல்ல ரெகார்டஸ்
வச்சுருந்தும் இவருக்கான அடித்தளம்
அங்க சரியா இல்ல,

பிறகு சன்ரைசர்ஸ்க்கு வந்தப்போ
ஸ்விங் ஸ்பெஷலிஸ்ட் புவி
இருக்கனால இங்க ஒரு ஓவர்ஷேட்
காரணமா இங்கையும் கிடைச்ச சின்ன
சின்ன வாய்ப்புகள எல்லாம் சிறுக சிறுக
சேமிச்சு வைக்குற மாதிரி ஒவ்வொரு
வாய்ப்பையும் தன்னோட பெஸ்ட்டா
கொடுத்தாருன்னே சொல்லலாம்,

ரொம்ப எளிமையா சந்தீப்போட
வாய்ப்பு பத்தி சொல்லணும்னா
தங்க முட்டை போடுற வாத்து
மாதிரி சந்தீப்,ஆனா அந்த வாத்த
வெட்டி மொத்தமா ஏமாறவும் இல்ல,
வாத்து முட்டை இட சரியான நேரமும்
அமையல,

அப்போ தான் ஒரு நாள் திடீருன்னு
புவி இஞ்சூரி ஆக பவர்பிளே ஸ்விங்
பௌலர் ஆப்ஷன்க்கு சந்தீப் ஷர்மா
உள்ள வந்தாரு,

ரொம்ப பெரிய வாய்ப்பு,புவி மாதிரி ஒரு
பிளேயரோட இடத்தை நிறைப்பணும்ன்னு
கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிரஷர் வேற,ஆனா
ஆச்சரியம் தான் எல்லாருக்கும் காத்திட்டு
இருந்தது,

புவி இல்லேனா என்ன பவர்பிளே
என் கண்ட்ரோல்ல நான் வச்சுக்குறேன்னு
அதோட சேர்த்து கூட விக்கெட்டும் எடுத்து
தன்னோட மிக பெரிய பங்களிப்பை சந்தீப்
தனது அணிக்கு கொடுத்து நம்பிக்கை
நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்,

சந்தீப்போட பௌலிங் பேஸ் கொஞ்சம்
கம்மி தான் ஆனா துல்லியமாக போட்டு
பேட்ஸ்மேன திணறடிக்குறதுல தான் இவர்
ஸ்பேஷலிஸ்ட்,பேஸ் கம்மிதானேன்னு
பேட்ஸ்மேன் அட்வான்டேஜ் எடுத்து
அவரோட பேஸ் யூஸ் பண்ணி அடிக்க
போனா அதோகதி தான் அப்படி ஒரு கிளீன்
கிளாசிக்கல் டெலிவரிய சந்தீப் ப்ரோட்யூஸ்
பன்ணுறார்,

சின்ன பையன் மாதிரி இருக்கான்
பேஸும் கம்மியா தான இருக்குன்னு
அசால்ட்டா நினைச்சு பேட்ஸ்மேன் உள்ள
வந்தா அவர்கள் நினைக்காத ஒரு மேஜிக்
ஸ்பெல்லை போட்டு விக்கெட் எடுத்துவிட்டு
எந்தவித செலிப்ரேஷன்ஸும் இல்லாமல்
சிரிச்சிட்டே சம்பவம் செய்வாரு இந்த சந்தீப்,

அடுத்த ஐ.பி.எல் ல புவி உள்ள வந்தாலும்
சன்ரைசர்ஸ் மேனேஜ்மென்ட்டோட கவனம்
சந்தீப் பக்கம் நிச்சயமா திரும்பும் கண்டிப்பா
ப்ளெயிங் XI – ல இருப்பாரு அதுக்கான
அடித்தளத்தை இங்க அவர் பூர்த்தி
செஞ்சுருக்காருன்னே சொல்லலாம்,

எது எப்படியோ இங்க வாய்ப்பு
கிடைக்குறது கஷ்டம்,அந்த வாய்ப்ப
சாதுர்யமா மாத்துறது ரொம்பவே
சுவாரஸ்யம்,அப்படி ஒரு சுவாரஸ்யம்
நிறைந்த சர்ப்ரைஸ் பேக்கேஜ் தான் சந்தீப்,

  • சந்தீப் ஷர்மா – ஸ்விங் சாணக்யன் !! ?

Pic: SRH official page

Related posts

விராட் கோலி – அனுஷ்கா சர்மாவிற்கு பெண் குழந்தை பிறந்தது

Kesavan Madumathy

யாரு சார் இந்த கிறிஸ்டோபர் ஹென்றி கெய்ல்..?

Shiva Chelliah

மோதி விளையாடு – ஐபிஎல் 2021

தென்ஆப்பிரிக்க தங்கங்கள்!

Penbugs

டி வில்லியர்ஸின் ஆல்-டைம் ஐபிஎல் லெவன்: எம்எஸ் டோனி கேப்டன்

Kesavan Madumathy

சென்னை அணியில் கொரோனா பாதிப்பு

Penbugs

சச்சின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்

Penbugs

கலியுக தர்ம யுத்தம்!

Shiva Chelliah

ஐபிஎல் போட்டியை நடத்த இலங்கை விருப்பம்..!

Penbugs

ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

Penbugs

ஐபிஎல் போட்டிகளின் ஏற்பாடுகளை மேற்பார்வையிட துபாய் புறப்பட்டார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி

Penbugs

ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் ரெய்னா

Penbugs

Leave a Comment