Penbugs
Cinema

விக்ரம் திரைவிமர்சனம் | Vikram Review

நடிகர் கமல்ஹாசன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், நரேன் , காளிதாஸ் ஜெயராம் , சந்தான பாரதி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் படம் வந்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது விக்ரம் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

கமல்ஹாசனின் மிக தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் அவருடன் இணைந்து பணியாற்றும் படம் என்பதால் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

அவரின் இசையில் வெளிவந்த பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் பெரிய அலையை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் புரொமோஷன் பணிகளில் கமல் காட்டிய ஆர்வம் ஒட்டு மொத்த திரையுலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று லோகேஷ் தனது டிவிட்டர் பதிவில் கைதியை இன்னொரு முறை மறுபார்வை பார்த்துவிட்டு விக்ரம் அழைத்துச் செல்லும் உலகுக்கு வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியது மேலும் ஒரு பெரிய எதிர்பார்ப்பை கூட்டியள்ளது.

படத்தின் கதை லோகேஷ் கனகராஜின் வழக்கமான கேங்ஸ்டர் அதுவும் அதிக இரவு நேர காட்சிகளை உள்ளடக்கிய கதை ஆனால் தனது வித்தியாசமான திரைக்கதையினால் அட சொல்ல வைத்து இருப்பதில் லோகேஷின் வெற்றி.

சர்வதேச தரத்தில் ஒவ்வொரு காட்சியையும் லோகேஷும் மற்ற தொழில் நுட்ப கலைஞர்களும் மிரட்டியுள்ளனர்.

இடைவேளை காட்சி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்ததுளள்து. இடைவேளை காட்சிக்கு திரையரங்கம் அதிர்கிறது.

படத்தின் இரு பெரும் தூண்களாக அனிருத் மற்றும் அன்பறிவு இருக்கின்றனர். படத்தின் ஆரம்ப காட்சி முதல் இறுதி வரை அனிருத்தின் அபாரமான உழைப்பு தெரிகிறது.

ஆக்சன் காட்சிகளில் உலகநாயகன் தெறிக்க விடுகிறார்.ஒவ்வொரு சண்டை காட்சியையும் அழகாக உருவாக்கியதில் வெற்றி கண்டுள்ளனர் அன்பு மற்றும் அறிவு.

லோகேஷ் தனது நேர்காணல்களில் கூறியபடி தனது குருவிற்கு அற்புதமான ஒரு பரிசினை தந்துள்ளார்.

ப்ளஸ் :

 • படத்தின் திரைக்கதை
 • அனிருத்தின் இசை
 • அன்பறிவின் ஸ்டண்ட்
 • பகத் பாசிலின் நடிப்பு
 • ஒளிப்பதிவு
 • கைதி படத்தின் கனெக்ட்
 • சூர்யாவின் ரோல்

மைனஸ் :

 • முதல் பாதியில் ஏற்படும் சில தொய்வு
 • படத்தின் நீளம்
 • எதிர்பார்த்த கிளைமேக்ஸ் சண்டை காட்சி
 • சூர்யா நடிப்பது வெளியில் தெரிந்ததால் உடைந்த சஸ்பென்ஸ்

மொத்தத்தில் நாயகன் மீண்டும் வர்றான் – உலகநாயகனின் வெற்றி உலா விக்ரம்

Related posts

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அரசுக்கு ஆலோசனை

Penbugs

பத்தல பத்தல அனிருத் இசையில் தர லோக்கல் பாடல்

Penbugs

தொலைக்காட்சி வழிக் கல்வித் திட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள்

Penbugs

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

Kesavan Madumathy

உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி வெளியான விக்ரம் கிளிம்ப்ஸ்

Penbugs

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கொரோனா

Penbugs

ஆரம்பிக்கலாமா என்று வெளியான கமல்ஹாசனின் பிக்பாஸ் 5 ப்ரோமோ

Kesavan Madumathy

அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்!

Kesavan Madumathy

VIKRAM: Lokesh Kanagaraj’s swaggering teaser has got the compelling spell just right!

Penbugs

Vikram gets emotional after Dhruv’s Adithya Varma release

Penbugs

THE SECOND LOOK, TEASER DATE OF VIKRAM’S KADARAM KONDAN RELEASED!

Penbugs

Leave a Comment