Penbugs
Editorial/ thoughts

அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்

காற்றின் வேகம் சற்று அதிகமாக
இருந்ததினால் கடல் அலைகள்
ஆர்ப்பரித்த வண்ணம் தனது வேகத்தில்
கொஞ்சம் வீரியத்துடன் காணப்பட்டது,

எப்போதும் பரவலாக கூட்டம்
இருக்கும் நாகர்கோவில் அருகில்
உள்ள சங்குத்துறை கடற்கரை
அன்று ஏனோ வெறிச்சோடி காணப்பட்டது,

கடற்கரை முழுவதும் குளிர்ந்த காற்று வீச
அருகிலிருந்த தென்னை மரங்களின்
கீற்றுகள் யாவும் நடனமாட கருமேகம்
வானத்தை சூழ ஒரு பெரிய இடி
பூமியின் மேல் விழுந்தது போல
பேரிடியாக விழுந்தது,

வீட்டின் முதல் பிள்ளைக்கு இடி என்றால்
ஆகாது என்று நம் முன்னோர்கள்
சொல்லி கேட்டதுண்டு, விழுந்த
பேரிடியின் அதிர்ச்சியில் சற்று
திளைத்து சுய நினைவுக்கு
வந்தவனாக நான்,

சிறு தூரலில் ஆரம்பித்த மழை
நேரம் எடுக்க எடுக்க பெருமழையாய்
பெய்ய தொடங்கியது, ஆளற்ற
கடற்கரையில் நான் மட்டும் தனியே
பெருமழையில் நனைந்த வண்ணம்
அமர்ந்திருக்கிறேன்,

என் கண்களில் இருந்து
சிந்தும் கண்ணீர் இந்த உலகத்திற்கு
புலப்படாத வண்ணம் மழை நீரில்
சங்கமித்து என் கன்னம் வழியே
தழுவி நிலத்தின் மேலே குடி பெயர்ந்தது,

மழையில் நனைந்த வண்ணம்
என் மனதில் ஒரு கேள்வி மட்டுமே
தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது,

“is being a Single Child a Curse..?”

இந்த கேள்விக்கான பதில் தான் நான்,

தமிழும் மலையாளமும்
கொஞ்சி விளையாடும்
இந்த நாகர்கோவில் தான்
என்னோட ஊரு, வாங்க மக்கா
என அன்போடு அழைக்கும் குணம்
கொண்ட ஊருன்னு சொல்லலாம்,

போன வாரம் எங்க அம்மா கூட
கொஞ்சம் மனஸ்தாபம்,
ஒரு வாரம் ஆச்சு எங்க அம்மாட்ட
பேசி,அம்மாக்கு கொஞ்சம் கோபம்
கலந்த பிடிவாதத்தனம் அதிகம்,
அவங்க என்கூட பேசல அதனாலேயே,
எங்க அம்மா கோபப்படுற அளவு
நான் அப்படி என்ன தப்பு செஞ்சுட்டேன்..? வீட்டின் ஒரே பிள்ளையாக
பிறந்த எனக்கும் எங்க அம்மாவின்
இந்த கோபத்திற்கும் என்ன சம்பந்தம்
இருந்து விட போகிறது..?
இப்போது நான் நனைந்து
கொண்டிருக்கும் இந்த மழைக்கு
மட்டுமே தெரியும் எனது கண்ணீரும்
இந்த கண்ணீருக்கு பின்னால் இருக்கும்
இந்த “கிருஷ்ணகாந்த்” – தின் இன்றைய
மனநிலையும்..?

ஆமா,
நான் “கிருஷ்ணகாந்த்” !!

எங்க அப்பா ரஜினி ரசிகரும் இல்ல
விஜய்காந்த் ரசிகரும் இல்ல,
ஒரு தாத்தா பெயர் “கிருஷ்ணா”
இன்னொரு தாத்தா பெயர் “காந்தி” –
ரெண்டையும் மிக்ஸ் பண்ணி
“கிருஷ்ணகாந்த்” – ன்னு எனக்கு
பெயர் வச்சதா என்னுடைய
வரலாறு எழுதப்பட்டு இருக்கிறது,

நாலு தடவ Abortion – ஐந்தாவதாக
பிறக்கும் நானோ Twins – பிறந்ததிற்கு
பின் போட்டி பொறாமை என்று
அவனுக்கும் எனக்கும் வாக்குவாதம்
வரும் என்பதால் Twin Babies – இல்
ஒருவனை கொன்று நான் மட்டுமே
5.5.1998 அன்று புதிதாக ஈன்ற கன்று
குட்டியாய் இந்த பூமிக்கு புதியவனாக
என் வருகையை பதிவு செய்தேன்,

Yes,எங்க வீட்டுக்கு
நான் ஒரு Single Born Child,
தவமிருந்து பெத்த பிள்ளை ரகம் – ன்னு
நம்ம ஊர்ல பேசிப்பாங்களே
அந்த வகையறா தான் நானும்,

1993 – ல ரிலீஸ் ஆன
கிழக்கு சீமையிலே படத்துல வர
“ஆத்தங்கர மரமே” பாட்டு தான்
எங்க அம்மா அப்பாவோட
லவ் anthem – ன்னு சொல்லலாம்,

” முத்துராமன் – தங்கமோனி ”

அம்மா அப்பாவ பாத்து
அப்படியே ரொமான்டிக்கா,

ஒத்தையில் ஓடும் ரயிலோரம்
கத்தியே ஒம்பேர் சொன்னேனே
அந்த ரயில் தூரம் போனதும்
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே
“முத்து மாமா ” என்ன விட்டுப் போகாதே
என் ஒத்த உசிரு போனா மீண்டும்
வாராதே,

  • ன்னு பாட்டுலாம் பாடுவாங்கலாம்
    அப்பா சொல்லி கேட்ருக்கேன்,
    அப்படி ஒரு Understanding லவ்
    Couples – ன்னு சொல்லலாம்,

சின்ன வயசுல முதல் நாள்
ஸ்கூல்க்கு போனப்போ
அந்த மிஸ் கிட்டயே என்ன கொஞ்சம்
தூக்குங்க – ன்னு சொல்லுற அளவு
செம வாலு நான்ன்னு அந்த மிஸ்
கூட அம்மாட்ட சொல்லிருக்காங்க,

ஆசைப்பட்ட எல்லாமே
கிடைச்ச பொற்காலம் அது,
LKG – 9th ஸ்டாண்டர்ட் வர
Asusual Single Born Child – க்கு
கிடைச்ச எல்லாமே எனக்கும்
கிடைச்சுச்சுன்னு சொல்லலாம்,
10th ஸ்டாண்டர்ட்ல நல்ல மார்க்
எடுத்தா அப்பா Play Station வாங்கி
தரதா சொன்னாங்க, படிப்பு விஷயத்துல
அப்பா பெருச என்ன கண்டுக்கமாட்டார்
என் போக்கில் என்னை விட்டு விடுவார்,
அம்மா தான் கொஞ்சம் இதுக்குள்ள
வருவாங்க, ஆனா அந்த நேரத்துல
என்ன கொஞ்சம் சுதந்திரமாக
விட்டதாலோ என்னவோ 469 –
மதிப்பெண்கள் எடுத்தேன்,
கொஞ்சம் ஸ்கூல்ல ஹீரோ
ரேஞ்சுக்குன்னும் சொல்லலாம்
அப்படியே கெத்தா அதுனாலயே
இந்த மார்க் வந்துச்சு,
அப்பா சொன்னது போல
ரிசல்ட் வரதுக்கு முன்னாடியே
எக்ஸாம் முடிஞ்ச அன்னைக்கே
அவர் சொன்ன Playstation
எனக்கு வாங்கிக்கொடுத்தாரு,

சென்னை 28 படத்துல
கோபிக்கு சின்ன வயசுல எப்படி
அந்த கிரிக்கெட் பேட் கிடைத்தவுடன்
அதை கட்டிப்பிடித்து தூங்குவானோ
அதை போல் தான் எனக்கு அப்பா
வாங்கி கொடுத்த Playstation,
அந்த நேரத்துல அதெல்லாம்
பசங்க வச்சிருந்தா நட்பு வட்டாரத்துல
இருக்க மத்த பசங்கலாம் பேசிப்பாங்க
“ஹே அவன் Playstation”
வாங்கிட்டான்டான்னு,
அந்த Surprised Packages
அடங்கிய அழகான நினைவுகளோட
அந்த நாட்கள் சென்றது,

பிறகு Bio – Maths குரூப் +1 சேர்ந்தேன்,
Building Strong பேஸ்மட்டம் தான்
வீக்கு – ன்னு சொல்லுறது போல
எல்லா சப்ஜெக்ட்ஸும் நல்லா படிக்குற
நான் Mathematics – ல மட்டும்
கொஞ்சம் Back வாங்கிப்பேன்,

10th – ல 460 – ற்கு மேல் மதிப்பெண்
வாங்கிய கோட்டாவில் சென்றதாலோ
என்னவோ அங்கு என்னுடன் இருந்த
பிற கிளாஸ்மேட் பசங்க எல்லாரும்
Mathematics – இல் வளரும்
ராமானுஜமாக இருந்தார்கள்,
சார் பிளாக் போர்டில் Algebra நடத்தும் போது,

(a+b)3 என்று எழுதிய அடுத்த நொடி
அந்த Formula – வான ” a3+3a2b+3ab2+b3
” – னை சொல்லி முடித்து
விடுவார்கள்,நானோ ஏதோ
ஒரு குழப்பத்துடன் நேற்று ஞாயிறு
கிழமை சாயங்காலம் டிவியில்
பார்த்த படத்தை பற்றி யோசித்து
கொண்டு இருப்பேன்,

இத்தனை வருடம் சுதந்திரமாக
இருந்த எனக்கு அம்மாவிடம் இருந்து
கொஞ்சம் பிரஷர் அதிகமாக தரப்பட்டது,
அதற்கு முன்பு அந்த மாதிரியான
ஒரு Atmosphere எனக்கு பழக்கமில்லை
என்றே சொல்லலாம்,

9th ஸ்டாண்டர்ட்டில் இருந்தே
நோக்கியா மொபைல் யூஸ் பண்ணிட்டு
தான் இருந்தேன், எல்லா பசங்களுக்கும்
வர மாதிரி அந்த பப்பி லவ் என்னோட
வாழ்க்கையிலையும் வேடந்தாங்கல்
பறவை போல வந்துச்சு,முகப்புத்தகத்துல
அப்போவே 10th லீவுல பேச தொடங்கி +1
டைம்ல லவ் also Successful – ஆ எனக்கு
அரங்கேறுச்சு,

*
ஆயிஷா !!

பெங்களூரு பொண்ணு
சொந்த ஊரு தஞ்சாவூர் என்றாலும்
சின்ன வயசுல இருந்தே பெங்களூரு
செட்டில்ட் மாடர்ன் கேர்ள்,

அவளுக்கு மற்ற காதலர்களை போல்
அடிக்கடி வெளியே சுற்றவேண்டும்
என்னோடு கைகோர்க்க வேண்டும்
என் தோள் மேல் சாய வேண்டும்
என்றெல்லாம் ஆசை, அதற்காகவே
கஷ்டப்பட்டு மாதம் இரண்டு முறை
நாகர்கோவில் – பெங்களூரு
சென்றும் வந்தேன்,

உரையாடலும் காதலும்
அவளும் நானும்
இரவும் தனிமையும் – என
காதல் கண்மூடி தனமா போன காலம்,

அப்போ தான் +1 ல யே
நம்ம ஸ்கூல் தான் +2 பாடம் எடுக்க
ஆரம்பிச்சு ஒரு வித நெருக்கமான
மனநிலையை பசங்களுக்கு
கொடுக்க தொடங்கிருமே
அப்படி ஒரு விஷப்பரீட்சை எனக்கும்
அன்று நடந்தது, இதுல அம்மா
ஒரு பக்கம் +2 வந்துட்டேன்ன்னு
சொல்லி நான் ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு
வர டைம் மட்டும் பார்த்து கேபிள் wire – அ
Remove செஞ்சுருவாங்க, கொஞ்ச
நாள்க்கு அப்பறம் தான் அம்மா
எனக்கு தெரியாம பண்ணுன
இந்த Activities எல்லாம் எனக்கு
தெரிய வந்துச்சு, காலைல 6 மணிக்கு
ஸ்கூக்கு போனா சாயங்காலம்
6 மணி ஆகும் வீடு திரும்ப,
Sports, Entertainment எல்லாம்
மண்ணோடு மண்ணாய் புதைக்கப்பட்ட
போது அம்மா மொபைலையும்
பிடிங்கி விட்டார்கள்,இந்தியாவிற்கு
காந்தி சுதந்திரம் வாங்கி தந்தார்
1947 – இல், இந்த பிரஷர் Situation – இல்
இருந்து இந்த கிருஷ்ணா விற்கு
சுதந்திரம் வாங்கித்தரப்போகும்
அந்த மகாத்மா யார் என்றெல்லாம்
எனக்குள் நானே கேள்வி
கேட்டுக்கொண்டிருந்த காலம் அது,

இதன் விளைவு +2 – வில் Bio Maths
குரூப்பில் வெறும் 759 மதிப்பெண்கள், 10th ஸ்டாண்டர்ட்டை போல்
என் போக்கில் என்னை விட்டிருந்தால்
நிச்சயம் நல்ல மதிப்பெண்கள்
வந்திருக்கும், அப்பறம் Long Distance
Relationship – எந்த காலத்துல
நம்ம ஊர்ல சக்ஸஸ் ஆச்சு,
எனக்கும் ஆயிஷாவிற்கும் இடையே
உரையாடல்கள் கம்மியாக
தொடங்கியது,குட்டி குட்டி சண்டைகள்
நெடுந்தொடர் வாக்குவாதங்களாக
இருவருக்கும் மாறின,

என்னோட அம்மாக்கு கோபம்
ரொம்ப அதிகமாகவே வரும்,
அப்பாக்கு அவங்க பொண்டாட்டிகிட்ட
அது பழக்கப்பட்ட ஒன்னு,
+2 ஸ்டார்டிங்ல அம்மா என் studies – ல
கொடுக்க ஆரம்பிச்ச பிரஷர் பிந்நாளில்
அது பழி தீர்க்கும் கோபமாக வளர்ந்து
கொண்டே வந்தது,+2 ரிசல்ட் அன்று
நான் எடுத்த மதிப்பெண்ணிற்கு
என் அம்மா அன்று என்னை கொலை
செய்திருந்தால் கூட
ஆச்சர்யப்படுவதற்கில்லை,
அன்று என் பெரியம்மா
எங்கள் வீட்டிற்கு வந்ததினால்
சிங்கத்திடம் சிக்காமல் தப்பி ஓடிய மான்
போல் நான் அன்று உயிர் பிழைத்தேன்,

+2 ரிசல்ட் வருவதற்கு முன்பே
நான் கொஞ்சம் டீடெயில்ஸ் கலெக்ட்
செய்து சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா
மெடிக்கல் காலேஜில் Paramedical Course
Apply செய்திருந்தேன்,நான் எடுத்த 759
மதிப்பெண்களுக்கு அங்கு மெடிக்கல் சீட்
கிடைக்காது என எங்கள் ஊரில்
ஆர்ட்ஸ் காலேஜில் சேருவதற்கு தயார்
ஆகியிருந்தேன், அம்மா கடும்
கோபத்தில் இருந்தார்கள் என் மீது,

நான் பெரிதாக சாதிக்க தவறிய
அந்த +2 மார்க்கில் நான் ஏதோ
ஒரு பெரிய Milestone – ஐ
தவறவிட்டுவிட்டேன் என்ற
ரேஞ்சுக்கு அம்மா போயிட்டாங்க,
கடைசில Paramedical லைன்
ராமச்சந்திரா கல்லூரியில்
எப்படியோ கிடைத்தது,
அதுவும் சாய்பாபா அருளினால்
தான் நீ விட்ட ஒரு பெரிய Milestone
திரும்ப உனக்கு கிடைத்திருக்கிறது
என அம்மாவின் மனதில் பசுமரத்தாணி
போல ஒரு Hope ஆழமாய் பதிந்தது,
நம்ம ஊரு பெண்கள் கொஞ்சம்
கடவுளுக்கு அஞ்சுவதும் அடிபணிவதும்
சகஜம் தானே, அப்படி தான் என்னோட
அம்மாவோட இந்த சாய்பாபா Hope – உம்,

” வாங்க மக்கா டூ அண்ணாத்த வா ”

Yes,Higher Studies – காக
சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா
மெடிக்கல் காலேஜில் 4 Years படிக்கும்
Accident & Emergency Course (Trauma) –
Join செய்தேன்,

பிறகு மீண்டும் ஆயிஷா,
Long Distance Relationship
தொடர்ந்தாலும் கொஞ்சம்
முன்ன பின்ன என்று தான்
காதல் போய்க்கொண்டு இருந்தது,
எப்போது வேண்டுமானாலும்
தூக்கு கயிறு நம் கழுத்தை வந்து சேரும்
என்ற ஒரு தூக்கு தண்டனை கைதியின்
பயத்தை போல இந்த Long Distance
Relationship காதல் எனக்கு பிரிவின்
பயத்தை அதிகமாக தந்தது,
ஒரு பக்கம் காதலின் பிரிவு பற்றிய பயம்,
இன்னொரு பக்கம் ஹாஸ்டல் வாழ்க்கை
பெற்றோரின் அரவணைப்பின்றி,
எப்போதாவது ஊருக்கு பயணம்
என்றே நாட்கள் நகர்ந்தது,

அடுத்த இரண்டு வருடங்கள்
மிக வேகமாக Paramedical Studies –
பற்றிய நாட்களில் கடந்தாலும்
ஆயிஷா – வின் காதலும் முடிவுக்கு
வந்தது,

எல்லா பசங்களும் மாதிரி
தனிமை,ஹாஸ்டல் வாழ்க்கை,
இப்போது காதல் பிரிவு என்னடா
எழவு வாழ்க்கைன்னு திரிஞ்சுட்டு
இருந்தப்போ என்னோட ஜூனியர்
3 வருஷமே படிக்க கூடிய
Nutrition டிபார்ட்மென்ட்ல
இப்போ 2nd Yearல ஒரு பொண்ணு
மேல பாத்தோன ஒரு Attraction,

காலேஜ்ல நடந்த ஒரு Guinness Record –
கான Oral Hygiene Competetion – ல
தான் அவள First டைம் பார்த்தேன்,

முதல் காதல் என்னவோ
முகப்புத்தகத்தில் தான்,
ஆனால் இரண்டாம் காதல்
கெளதம் மேனன் படத்தில்
வருவது போன்று “Love at First Sight ”
மொமெண்ட் தான்,

மின்னலே படத்துல
ராஜேஷ் சிவகுமார் ரீனா ஜோசப்கிட்ட
சொல்லுற அந்த டயலாக் தான்
என்னோட இரண்டாம் காதலுக்கு
அச்சாணி,

மின்னல் வெளிச்சத்துல
ஒரு பொண்ண பார்த்தேன்..
அவளும் மின்னல் மாதிரி தான்
ஒரு Flash மனசே போயிடுச்சு
உயிர் மட்டும் தான் பாக்கி
நான் அவளை காதலிக்கிறேன்
நினைக்கிறேன்,

அப்பறம் அவ டிபார்ட்மென்ட்
தோழிகள் மூலமா அவளுக்கு
காதல் தூது அனுப்பி முகப்புத்தகத்துல
அவ ID கண்டுபிடிச்சு போய் பேசுனா
தைரியம் இருந்தா நேருல வந்து சொல்லுன்னு அவ சொல்ல
அடுத்த நாளே அவகிட்ட போய்
வேட்டையாடு விளையாடு
ராகவன் போல தைரியமா
போய் சொல்ல அப்பறம் என்ன
லவ் தான் இப்போ வர,

” லக்ஷ்மி பிரபா ”

ஆனா நான் என்னமோ
பாப்பா – ன்னு தான் அவள கூப்பிடுவேன்,

ஆடி மாசம் அடிக்குற காற்றுல
அம்மியும் நகரும்ன்னு சொல்லுவாங்கல
அப்படி எனக்குள்ள முழுசா இப்போ
அவ தான் இருந்து என்ன அவளோட
சப்போர்ட்ல வழி நடத்தி கொண்டு
போறான்னு சொல்லலாம்,

அவளுக்கு மூணு வருஷம்
எனக்கு நாலு வருஷம்
ஆகமொத்தம் ரெண்டு பேரும்
UG – Final Year முடிச்சுட்டோம்,

So,What Next..?
என்ற கேள்வி வரும்போது
Again PG Studies,
இப்போது அதே சென்னை
SRM University,
ரெண்டு பேரும் ஒரே கிளாஸ்,
” Master in Public Health ” – கோர்ஸில்,

So,எல்லாமே நல்லா போய்கிட்டு
இருக்குன்னு நினைச்ச டைம்,

நீண்ட விடுமுறை நாட்களினால்
நானும் அவளும் சொந்த ஊருக்கு
திரும்பினோம்,

நானும் நாகர்கோவில் வந்துவிட்டேன்
விடுமுறை நாட்களில் திரைப்படங்கள்,
யுவன்ஷங்கர்ராஜா பாடல்கள்,சாப்பாடு,
தூக்கம் என நாட்கள் நகர்ந்தது,

அன்னக்கி ஒரு நாள்
எனக்கு ரொம்ப தலை வலி,
Migraine Or Something Else – ன்னு
வச்சுக்கலாம்,தூக்கம் இல்லாம
அந்த தலை வலியோட
வேற வழியில்லாம நான்
ஆன்லைன் Lectures
கேட்டு கொண்டிருந்தேன்
என்னுடைய லேப்டாப்பில்,
நான் தான் Class Representative வேற,
So அன்னக்கி ஈவினிங்
கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆன்லைன்
Lecture கிளாஸ் இருக்கமாதிரி
இருந்துச்சு,பசங்க வேற
ஈவினிங் கிளாஸ் – ன்னு சொன்னதும்
கொஞ்சம் அப்செட் ஆகிட்டாங்க,
அப்பறம் பசங்களையும் Staffs – ஐயும்
Convince பண்ணிட்டு
ஒர்க்லாம் முடிச்சுட்டு Just Relaxed – ஆ
வந்து பெட்ல படுத்தேன்,
அம்மா வந்து அப்பாக்கு ஏதோ
ஹெல்ப் பண்ண சொல்லி கூப்பிட்டாங்க,
என்னோட தலை வலியால அம்மாகிட்ட
கொஞ்சம் கோபமா நடந்துக்கிட்டேன்
அது என்னோட தப்பு தான் ஆனா,
என்னால வலி தாங்க முடியாம
என்னையறியாம நான் செஞ்ச
ஒரு பெரும் தவறு அது,

நான் என்னையறியாம
செஞ்ச அந்த ஒரு தவறு
அவளோ பெரிய பிரச்சனையா
மாறும்ன்னு எனக்கு அப்போ தெரியல,

நான் அம்மாகிட்ட
கோபமா கத்துனத்துக்கு
“தண்ட சோறு” – ன்னு ஒரு வார்த்தைய
அம்மா திட்டிட்டாங்க,அவங்க
தெரிஞ்சு திட்டுனாங்களோ
தெரியாம திட்டுனாங்களோ
அது எனக்கும் மேலும் கோபத்தை
அதிகப்படுத்தி நெருப்பு மழையை
கக்கும் எரிமலை போல
அம்மாவுக்கும் எனக்குமான
வார்த்தை போர்
அதிகமாகிக்கொண்டே சென்றது,
ஊரில் எவனோ ஒருவன்
நம்மை தண்டச்சோறு என்று
திட்டினாலே நமக்கு கோபம்
அனலாய் பொங்கும், இதில்
அம்மா – வே என்னை அப்படி
சொல்லியவுடன் என் மனம்
அதை சுத்தமாக ஏற்றுக்கொள்ளவில்லை,
அம்மா மனதில் இருந்து
அந்த வார்த்தை வந்திருக்காது
என்பது எனக்கு தெரியும்,
ஆனாலும் ஏதோ ஒரு தாழ்வு
மனப்பான்மை என்னை போட்டு
வாட்டி எடுத்தது,

ஏற்கனவே அம்மாக்கு கோபம்
பயங்கரமா வரும், அப்போ தான்
ஒரு விஷயம் தெரிஞ்சது,
அம்மா 5 வருஷத்துக்கு முன்னாடி
நான் +2 ல மார்க் கம்மியா எடுத்தப்போ
உண்டான கோபம் ஆறாத வடு போல
அவங்க மனசுல அது ஒரு முள் மாதிரி
இன்னும் குத்திட்டே இருக்குன்னு,
“தண்டச்சோறு” – ன்னு சொன்னதுல
ஆரம்பிச்ச இந்த பிரச்சனை அம்மாவோட
கோபத்தினால் வார்த்தைகளை
அடுக்க அடுக்க ஐந்து வருடம் பின்
சென்று அம்மாவின் கோபம் என்னை
என்னை அவர்களை ஒரு ஸ்டேஜில்
வெறுக்க வைத்துவிட்டது,Single Born
Child – ஆக நான் அந்த +1, +2 – வில்
அனுபவித்த பிரஷர் மற்றும்
நான் ஆசைப்பட்ட ஒரு பொருள்
எனக்கு Single Born Child – இல்
உடனே கிடைத்தாலும் சிறுவயதில்
பக்குவமடைந்த மனசு +2 படிக்கும்
வயதில் கேட்டவை எல்லாம்
கிடைத்தாலும் அது கிடைச்ச பீஃல்ல
ஒரு Single Born Child – ஆ உணர
முடியாம அம்மா படிப்புல கொடுத்த
Pressure,சுதந்திரம் பறிபோனது,
ஸ்கூல் Atmosphere,சமூகத்தின்
பார்வை (அவன் பையன் +2 – ல
இவளோ மார்க் நீ கம்மி )
போன்றவைகள் தடுத்து நிறுத்தின,

Yes, I Hates My Mom – ன்ற
லெவல்க்கு போயிட்டேன்,
நான் மறந்து இருந்த
எல்லா நாட்களையும் இப்படி
மனசுல வச்சு போட்டு
உடைச்சுட்டாங்கன்னு!

ஒரு நொடி மனசு நொந்து போயிட்டேன்,
ரூம்குள்ள அடஞ்சுக்கிடந்தேன்
அம்மாவும் என்கிட்ட வந்து பேசல
எங்க ரெண்டு பேரு நால அப்பாவும்
Upset, இப்படியே ஒரு வாரம் போச்சு,

எட்டாவது நாள் காலை
பைக் எடுத்தேன்
வண்டிய ஸ்டார்ட் செஞ்சு நேரா
சங்குத்துறை கடற்கரைக்கு போனேன்
எனக்கு ரொம்ப பிடிச்ச இடமும் கூட,

போற வழில ஒரு கடையில நின்னு
Migraine என்பதால் (ஒற்றை தலை வலி)
டீ குடிச்சேன், அங்க கூட என்னோட
Situation – க்கு தகுந்த மாதிரி
என்னோட Painkiller – ஆன
யுவன்ஷங்கர்ராஜா குரலில்
நா.முத்துக்குமார் வரிகளில்
அந்த பாடலின் இடையில் வரும்
வரிகள் ஒலித்துக்கொண்டிருந்தது,

பழி போடும் உலகம் இங்கே?
பலியான உயிர்கள் எங்கே?
உலகத்தின் ஓரம் நின்று
அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று
நாமும் சேர்ந்து நடித்திருப்போம்


கடற்கரையில் அமர்ந்து
மழையில் நனைந்து கொண்டிருந்தேன்
என் மனதில் ஒரு கேள்வி மட்டுமே
தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது,

“is being a Single Child a Curse..?”

கேட்டதெல்லாம் கிடைக்குற
சந்தோஷத்துல இருக்க
ஒரு உற்சாகம் கொஞ்ச நாளுக்கு
பிறகு ஆசைபட்டது கிடைக்கும்போது
அதுக்கு முன்னாடி அனுபவிச்ச வலி
நிறைந்த சில கசப்பான சூழ்நிலையால
இப்போ அது நம்ம கையில கிடைச்சும்
அது நமக்கு கிடைக்குதுன்னு கூட
உணர முடியாம போறப்போ நமக்கு
ஏற்படுற வலி சொல்லும் ஒவ்வொரு
Single Born Child – உம்
சபிக்கப்பட்டவர்கள் என்று,

மழை நீரோடு சேர்ந்து
என் கண்ணீரும் கடற்கரை
மணலை ஈரப்பதமாகியது,

மழை சற்று குறைந்தது,
என் பைக் பெட்ரோல் டேங்க்
கவரின் உள் ஒரு பிளாஸ்டிக்
கவருக்குள் மழைக்காக மூடி
வைத்திருந்த எனது மொபைலிற்கு
என் காதலி “பாப்பா” – விடம்
இருந்து கால் வந்தது,

வீட்டில் நடந்த
எல்லாவற்றையும் கூறினேன்,

அவள் கூறிய ஒரே வாக்கியம்,

“அம்மா தானே போய் கட்டிபிடிச்சுரு”

அது என்னமோ
எங்க அம்மா அவளோ திட்டி
அவளோ வார்த்தையை விட்டு
என்னை காயப்படுத்தினப்பவும்
“பாப்பா” சொன்ன இந்த
ஒரு வார்த்தை எனக்குள்ள
ஏதோ ஒரு மாயப்பிம்பமான
ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துச்சு,

மழையில தொப்ப தொப்பையா
நனைஞ்சுட்டு வீட்டுக்குள்ள போனேன்,
அவளோ காயப்படுத்துன அம்மா
“ஈரத்தலையோட எங்க போய்
இப்படி சொத சொதன்னு நனைஞ்சுட்டு
வரன்னு சண்டை – ன்ற ஒரு விஷயமே
வீட்டுல நடக்காத மாதிரி
ஈரமா இருந்த என்னோட தலய
துவட்டி விட ஆரம்பிச்சுட்டாங்க,
வேற எதுவுமே யோசிக்காம
அம்மா – வ போய் கட்டி பிடிச்சுட்டேன்,
அம்மாவோட ஓரக்கண்ணுல
லேசா கண்ணீர் துளி வடிஞ்சு
என்னோட தோள்பட்டை மேல
விழுந்துச்சு,

இதான் இந்த கிருஷ்ணகாந்த் – தான
என்னோட கதை, Single Born Child –
ஆன அனைவரும் ஏதோ ஒரு
விஷயத்துல சபிக்கப்பட்டவர்களாகவே
இருந்து வருகின்றனர், இது Single Born
Child – க்கு மட்டுமில்லை பொதுவாகவே
நம்ம ஊருக்கு பொருந்த கூடிய ஒன்று
தான், இந்த நிலை மாற வேண்டும்
என்றால் ஒவ்வொரு பெற்றோர்களும்
மத்த பிள்ளைங்க அப்படி படிக்குறாங்க
நீயும் அப்படி படிக்கணும் அந்த பையன்
பொண்ணு போல நீயும் மார்க்
எடுக்கணும்,அவன் Drawing கிளாஸ்
போனா நீயும் போகணும் – ன்னு
வலுக்கட்டாயமா தங்களோட
பெருமிதத்துக்காக சேர்த்து விடுறது,
இது போன்ற விஷயங்கள் இங்க
மாறணும், தங்களோட பிள்ளைகளுக்கும்
ஒரு Extra Skills இருக்கும், உங்களால
முடிஞ்சா உங்க பசங்ககிட்ட இருக்க
அந்த Skills – ஆ வெளிய கொண்டு
வாங்க, அவங்கள Strict – ஆ
வழிநடத்துங்க தப்பில்ல ஆனா
Pressure Build பண்ணாதீங்க
இது தான் நீ படிக்கணும்,
ஹிந்தி கிளாஸ் போகணும்,
HDCA கம்ப்யூட்டர் கிளாஸ் போகணும்னு
சின்ன வயசுலேயே, நீங்க சின்ன
வயசுல கொடுக்குற இந்த Pressure Build
நாளைக்கு அவங்க இளமை வாழ்க்கைய
திரும்பி பார்க்கும் போது அது மொத்தமும்
அந்த Pressure Situation தான்
அவங்க Mind – ல ஒரு Black Days – ஆ
ஓடிக்கிட்டே இருக்கும்,

இன்ஜினியரிங் படிக்க நினைத்தவன்
காசு இல்லாமல் ஆர்ட் காலேஜ் சேருவது
பெற்றோர்களின் இயலாமை – ன்னு
சொல்லலாம், ஆனா இங்க ஓரளவு வசதி
வாய்ந்த பசங்க கூட தான் படிக்க
நினைச்சத ஆசை பட்டத படிக்க முடியாம
பக்கத்து வீட்டுகாரன், சொந்தக்கார மாமா
உங்க பெற்றோர் கிட்ட சொன்னதன்
பெயரில் உங்க பெற்றோரின்
வலுக்கட்டாயத்தின் பெயரிலும்
தங்களுக்கு பிடிக்காத ஒரு துறையை
தேர்ந்தெடுத்து இங்க எத்தனை பேரு
தினம் தினம் காலேஜ் சென்று வந்து
கொண்டிருக்கிறீர்கள்..?

இதெல்லாம் மாறணும்ன்னு
இருந்தா மாறும் இல்லேன்னா
அப்படி இருக்க பெற்றோர்கள்
அப்படியே தான் இருப்பாங்க
அப்படி Pressure Handling Situation
அனுபவிக்குற பசங்க இதான் நமக்கான
வாழ்க்கை – ன்னு கொஞ்சம் கஷ்டப்பட்டு
விரும்பி ஏத்துக்கோங்க உங்க
அம்மாக்காக,

பத்து மாசம் உயிர் போகின்ற
ஒரு வலிய கடந்து தான் இந்த
உலகத்துக்கு உங்கள கொண்டு
வந்தாங்க,அதே மாதிரி
இந்த வாழ்க்கைய நீங்க
அவங்களுக்காக சந்தோஷமா
ஏத்துக்கிட்டு வாழுங்க உங்க
அம்மாவ கட்டிபிடிச்சுட்டே காலத்துக்கும்,

  • முற்றும் !!

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.

விளக்கம் :

அன்பை தாழ்ப்பாள் போட்டு
அடைத்து வைக்க முடியுமா..?
அன்புள்ளம் கொண்டவர்களின்
சிறு கண்ணீரே அவர்களது
அன்பினைப் பலர் அறிய
வெளிப்படுத்தி விடும்,

Original Story : Krishna Kanth

Scribbles by

Yours Shiva Chelliah : ) “

Related posts

வித்யாசாகர் எனும் சேமிப்பு காதலன்

Shiva Chelliah

மனிதம் வளர்ப்போம்!

Dhinesh Kumar

திரு.குரல்..!

கோடையில மழை!

Shiva Chelliah

ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்..!

Shiva Chelliah

ஆட்டோ டிரைவர் மாணிக்கம்

Shiva Chelliah

World Tea Day..!

Shiva Chelliah

Virat Kohli-Anushka Sharma mourn the loss of their pet Bruno

Penbugs

Time to spread love and kindness: Shruti Haasan

Penbugs

Tholaigirene: A Blissfully Candid musical that immediately stays with you!

Lakshmi Muthiah

Saindavi-GV Prakash blessed with baby girl

Penbugs

Paava Kadhaigal Netflix: A strong attempt to document the sickening sides of society

Lakshmi Muthiah