Penbugs
Cinema

அண்ணாத்த – திரைப்பட விமர்சனம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா , கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என பெரிய‌ நடிகர் பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் தான் அண்ணாத்த.

இப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளி வந்ததிலிருந்தே இதன் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமானது ஏனெனில் சிறுத்தை சிவாவின் முந்தைய மெகா ஹிட் படம் விஸ்வாசம்.

விஸ்வாசத்தின் அதிரி புதிரி கமர்ஷியல் ஹிட் , தமிழ் சினிமாவின் கமர்ஷியல் சக்கரவர்த்தி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து படம் செய்யும் வாய்ப்பினை சிவாவிற்கு பெற்று தந்தது.

படத்தின் டீஸர் ,டிரைலர் மற்றும் பாடல்கள் இணையத்தில் ஹிட் அடித்து மேலும் எதிர்பார்ப்பினை எகிற வைத்தது.

அண்ணாத்த படம் தீபாவளி நாளான இன்று நவம்பர் 4-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

“இன்னைக்கு ஆரம்பிக்குது திருவிழா’ அசத்தும் அண்ணாத்த டிரைலர்

சிவாவின் வழக்கமான கமர்ஷியல் கதைதான் அண்ணாத்த .அண்ணண் தங்கை பாசம் , ஆங்காங்கே வாழ்க்கைக்கு தேவையான வசனங்கள் , சூப்பர் ஸ்டாரின் இமேஜை மனதில் கொண்டு தனது பார்முலா படத்தை ரஜினிகாந்தை வைத்து தந்துள்ளார் சிவா.

படம் முழுவதும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஒன் மேன் ஷோ , சூப்பர்ஸ்டாரின் சுறுசுறுப்பு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்…!

தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சிவாவின் முந்தைய படங்களான வீரம் , வேதாளம், விஸ்வாசம் ஆகிய கதைகளின் தாக்கம் பெரிதாக வந்து செல்வது படத்தின் மிகப்பெரிய மைனஸ்‌.

முதல் பாதி முழுவதிலும் வெறும் காட்சிகளால் கதையை நகர்த்தி இடைவேளையின்போது கதையை சொல்ல முற்படுவது மிகப்பெரிய குறையாக உள்ளது.

இரண்டாம் பாதி இதுதான் நடக்கும் என்பதை இடைவேளையின்போதே ரசிகர்கள் அனைவரும் சொல்லிவிடுவது படத்தின் சுவாரஸியத்தை வெகுவாக குறைத்து விடுகிறது.

இமானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்‌.

ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் பாசத்தை கடத்துவதில் எடுத்து கொண்ட சிவாவின் முயற்சி முழுதாக சென்று சேரவில்லை .

படத்தின் பிளஸ் :

*சூப்பர்ஸ்டாரின் ரஜினிகாந்தின் ஸ்கீரின் பிரசன்ஸ்
*இமானின் இசை
*சில சில வசனங்கள்
*படத்தின் ஒளிப்பதிவு

படத்தின் மைனஸ் :

  • ஒரே டெம்ப்ளேட் கதை
  • யூகிக்ககூடிய திரைக்கதை
  • ரசிகர்களுக்கு எமோஷனல் கனெக்ட் ஆகாமல் இருப்பது
  • படத்தின் காமெடி காட்சிகள்
  • சிவாவின் பழைய‌ படத்தின் லொகேஷன்களே திரும்ப திரும்ப வருவது
  • பெரிய நட்சத்திர பட்டாளம் வீணடிக்கப்பட்டது.

சூப்பர்ஸ்டாரின் உலகளாவிய புகழை தமிழ் இயக்குனர்கள் இன்னும் சிறப்பாக கையாண்டு வித்தியாசமான கதைகளை தரலாம் .

அண்ணாத்த – தலைவர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் …!

Related posts

நலமாக உள்ளார் சூப்பர்ஸ்டார் – லதா ரஜினிகாந்த்

Penbugs

சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தின் டீஸர் வெளியானது

Kesavan Madumathy

எஸ்பிபி பாடிய ‘அண்ணாத்த’ பட பாடல் வெளியானது

Kesavan Madumathy

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்

Penbugs

அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியானது

Kesavan Madumathy

அண்ணாத்த படத்தின் இரண்டாவது பாடல் சார காற்றே வெளியானது

Kesavan Madumathy

Marudhani song lyrics video from Annaatthe

Penbugs

Annaatthe to release by Pongal 2021

Penbugs

“இன்னைக்கு ஆரம்பிக்குது திருவிழா’ அசத்தும் அண்ணாத்த டிரைலர்

Kesavan Madumathy

Leave a Comment