Penbugs
CricketInspiringMen CricketWorld Cup 2019

அசகாய சூரன் ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் டி 20 ஒரு புது பிளேயர் அதுவும் லெக் ஸ்பின்னர் டெபுட் ஆகிறார் ஒரு நியூஸ் அந்த மேட்ச் ரொம்ப டப்பா போகிட்டு இருக்கறப்ப முக்கியமான 18வது ஓவர் போட ஸ்மித் வருவார் ஒரு சிக்ஸ் கொடுத்தாலும் ஒரு விக்கெட் எடுத்து அந்த ஓவரை முடிச்சுடுவார் அப்ப அந்த அளவிற்கு ஒரு ஈர்ப்புலாம் அவர்‌ மேல பெருசா வர்ல .

2011ல் இந்தியா – ஆஸ்திரேலியா குவாட்டர் பைனல் அப்ப “லெக் ஸ்பின்னர் ” ஸ்டிவ் ஸ்மித் அவுட் வேற யாரோ ஒரு பிளேயர் அதுக்கு பதிலா லெவன்ஸ்ல வர்றாங்க இப்படிதான் ஆரம்பத்துல அவரின் பெயர் பரிச்சயம்…!

அதுக்கு அப்பறம் அந்த பெயர் மனசுல பதிவான இடம் ஐபிஎல்லில் புனே வாரியர்ஸ் சார்பாக ஒரு பிளேயர் லாங் ஆன் (நினைவு சரியாக இருந்தால் ) திசையில் ஒரு பீல்டர் சிக்ஸ் போற பந்தை தடுத்து ஒரு நம்ப முடியாத பீல்டிங் பண்றார் அதுவும் இல்லாம அப்ப ஒரு பேட்ஸ்மேனாகவும் தன்‌ திறமையை காட்றார் அட என்னடா ஸ்பின்னர் இப்ப பேட்ஸ்மேனா ஆகிட்டாரேனு ஒரு பெரிய ஆச்சரியம் …!

அதுக்கு அப்பறம் ஸ்மித் ஆட்றதுலாம் பார்த்தா மனுசனா இவன் என்றுதான் தோணும் அந்த அளவிற்கு ஒரு பர்பெக்டான பேட்ஸ்மேன் ஷாட் செலக்சன்லாம் அந்த அளவிற்கு இருக்கும் …!

இத்தனைக்கும் ஸ்மித் வோட ஸ்டேன்டிங் பொசிசன் நார்மல் பேட்ஸ்மேன் நிக்கிற மாதிரிலாம் இருக்காது கிரிக்கெட்ல ஒரு டெர்ம் இருக்கு ” Unorthodox ” ஸ்மித்தின் பேட்டிங் கூட அப்படிதான் பவுலர் ரன் அப் ஆகும்போது ஸ்டிக் எதுவுமே தெரியாது ஆரம்பத்தில் அது அவரின் வீக்னெஸா சொன்னவங்க நிறைய ஆனா அதையே தன்னுடைய பிளஸ்ஸா மாத்தினது ஸ்மித்தின் முயற்சியும் , பயிற்சியும் …!

பொதுவா ஆசிய அணிகளை தவிர மற்ற நாட்டு வீரர்கள் ஸ்பின் ஆட ரொம்ப கஷ்டப்படுவாங்க ஆனா ஸ்மித் இதுலதான் ஸ்பெசல் பந்துவின் சுழலை சரியா கணிச்சு ஆட்றதுல ஸ்மித் கில்லி …!

அதனால்தான் இந்திய பிட்ச்களில் கூட இந்திய பேட்ஸ்மேன்கள் போலவே சர்வ சாதாரணமாக ஆட முடிந்தது அவரால் …!

கிளார்க்கு போன அப்பறம் கேப்டன்ஷிப் பண்ண ஆரம்பிச்ச ஸ்மித் அதுலயும் தன்னுடைய ஆளுமையை நிரூபித்தார் மேட்ச்சை ரீட் பண்ற விதம் , சேசிங்ல அணியை வழி நடத்தி செல்றது என்ன ஒரு டிபிக்கல் ஆஸ்திரேலிய கேப்டனுக்கே உண்டான அந்த கெத்தோடு இருந்தார்…!

சில சாதனைலாம் ஸ்மித் பண்ணதை பார்த்தா ஒரு ஸ்பின்னரா வந்து ஆளா இவருனு யோசிக்க வைக்கும் அப்படி பட்ட சில சாதனைகள் :

Fastest Australian batsman and sixth-fastest batsman in the world to reach 10,000 runs in International cricket…!

Fastest batsman to reach 7,000 runs in Tests..!

Only the second batsman to score more than 1,000 runs in Test cricket in four consecutive calendar years…!

First batsman to register ten successive scores of 50 or more against a single opponent in Test history..!

The second-highest Test batting rating (947), behind Don Bradman’s 961…!

Joint most consecutive 50+ scores in World Cup history with five such scores in the 2015 Cricket World Cup….!

ஸ்மித் 2.O

பால் டேம்பரிங் பிரச்சினை வந்து ஒரு வருட தடை வாங்கின அப்ப கிரிக்கெட் உலகமே அவரை விமர்சித்து அது சரி‌ தவறு என்ற விவாதத்திற்கு போவதற்கு முன் அதிலிருந்து அவர் மீண்ட விதம் ரொம்பவே வியக்க வைச்ச ஒண்ணு ‌..!

உலக மீடியாக்களால் ரொம்பவே கடுமையான நேரடியான விமர்சனத்துக்கு ஆளாகி எங்க போனாலும் அவரை பின்தொடர்ந்து அவரை காயப்படுத்திய காணொளிகள் அதிகம் ஒரு காணொளியில் அவர் முற்றிலும் உடைந்து அழுதது ஒரு தலைசிறந்த பேட்ஸ்மேனுக்கு நாம தரும் மரியாதை இவ்ளேதானா என்றெல்லாம் தோன்றியது ‌‌.

தடை நீங்கி‌ முதல் போட்டியே உலககோப்பை போட்டிதான் அந்த தொடரில் அவர் அடித்த ரன்கள் 370க்கு மேல் ‌. அடுத்து ஆஷஷ் முதல் போட்டியிலயே இரண்டு இன்னிங்ஸ்லும் சதம் , இரண்டாவது டெஸ்ட்டில் ஆர்க்கரின் வேகமான பந்து வீச்சில் காயம் பட்டாலும் 92 ரன்கள் எடுத்து அவுட் ஆகி இருப்பார் ‌ . மூன்றாவது டெஸ்ட் காயம் காரணமாக ஆடாமல் நான்காவது டெஸ்டில் இரட்டை சதம் ‌‌இங்கிலாந்தை ஒரு மிரட்டு மிரட்டினார்‌ அந்த தொடரில் அவர் எடுத்த மொத்த ரன்கள் 774 …!

ஆசஸ் போட்டிகளில் தொடர்ந்து பத்து இன்னிங்ஸில் 50+ ரன் அடித்த சாதனையை வேறு படைத்தார் ஸ்மித் …!

ஸ்பின்னரா டீமுக்கு வந்து இன்று பெரிய பேட்ஸ்மேனா மாறினதில் அவரின் உழைப்பு மட்டுமே , தன்னை தயார்படுத்திக் கொள்வதில் அவர்‌ எடுக்கும் மெனக்கெடல்கள் அதிகம் …!

மாடர்ன் டே கிரிக்கெட்டில் உலக அளவில் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஸ்மித் என்பதில் மாற்றுக்கருத்து இருப்பவர்கள் மிக குறைவு இன்னும் பல சாதனைகள் கண்டிப்பா செய்ய போகும் ஸ்மித்தின் பிறந்தநாள் இன்று

Related posts

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

Penbugs

மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை – பிரதமர் மோடி…!

Penbugs

பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?: விஜய் சேதுபதி ஆதங்கம்…

Penbugs

டி20: அணி மாறினார் கிறிஸ் கெயில்..!

Penbugs

சென்னைக்கு வந்தா வீட்டுக்கு வாங்க: நடராஜனுடன் வீடியோகால் பேசிய சரத் குமார்

Penbugs

கவுதம் கம்பீருக்கு குவியும் பாராட்டுக்கள்!

Penbugs

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்

Kesavan Madumathy

You deserve the man of the series from my side bhai: Hardik Pandya to Natarajan

Penbugs

Women’s Ashes: Heather Knight slams 2nd Test ton, keeps England Ashes hopes alive

Kalyani Mane

Women’s Ashes: England senior, A squads announced

Penbugs

Women’s Ashes: England loses to McGrath magic

Kalyani Mane

Women’s Ashes: Australia announce squad, King included, Wellington misses out

Penbugs