Penbugs
Cinema

வலிமை படம் விமர்சனம் | Valimai Review

valimai film download

நேர் கொண்ட பார்வை படம் வெளியாகி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள படம் வலிமை.

அஜீத்தின் திரைப்படங்களிலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக அதுவும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ,கால்பந்து போட்டிகள் சினிமா விழாக்கள் என அனைத்து இடங்களிலும் வலிமை அப்டேட் என்ற வார்த்தை பரவலாக பேசப்பட்டது.

வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா , முக்கிய கதாப்பாத்திரத்தில் இந்தி நடிகை
ஹுமா குரேஷி என நடிகர் தேர்விலும் கவனம் பெற்ற படமாக வலிமை உருவாகி வந்தது.

படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும்படி படத்தின் மேகிங் வீடியோ மற்றும் பாடல்களை அவ்வப்போது வலிமை பட குழுவினர் வெளியிட்டு வந்தனர்.

படத்தின் ஒரு வரி கதை செயின் பறிப்பு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் பைக் ரேசிங் குழுவை, அஜித் ஒரு காவல்துறை அதிகாரியாக கண்டுபிடிப்பதுதான்.ஆனால் அதனை
ஹெச் வினோத் அஜித்திற்கு பிடித்தமான முழுக்க முழுக்க பைக் ரேசிங் காட்சிகளின் பின்னணியில் உருவாகியுள்ளார்.

அஜித் படத்தின் மாஸ் பிம்பமாக தெரிகிறார். பைக் சேசிங் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகளில் தனக்கான முத்திரையை வழக்கம்போல பதித்துள்ளார்.

படத்தின் வில்லன் கார்த்திகேயாவின் உடல் அமைப்பு வில்லனுக்கான உடல் அமைப்பை கனகச்சிதமாக உள்ளது மிகப்பெரிய பலத்தை தருகிறது.ஆரம்பம் அமர்க்களமாக ஆரம்பித்து பிறகு அவரின் கேரக்டர் வலு குறைய துவங்குவது படத்தின் மைனஸ்‌.

படத்தில் ஹீமா குரோஷி போலீஸ் அதிகாரியாக தனது பங்களிப்பை சிறப்பாக தந்துள்ளார். அவரும் தனது ஆக்ஷன் காட்சிகளில் தூள் கிளப்புகிறார்.

படத்தின் ஒளிப்பதிவு மற்றும் சண்டைக்காட்சிகள் சர்வதே தரத்தில் உருவாக பெரும் உழைப்பை தந்துள்ளது கண்கூடாக திரையில் தெரிகிறது.

தனது முந்தைய படங்களில் ( நேர் கொண்ட பார்வையை தவிர்த்து) தனது வலிமையான எழுத்திலும் ,திரைக்கதையிலும் முத்திரை பதித்த வினோத் இந்த படத்தின் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

ஆக்சன் காட்சிகள் தரும் ஆச்சரியத்தை சென்டிமென்ட் காட்சிகள் துளியும் தராமல் போனது படத்தின் மிகப்பெரிய மைனஸ்‌.

படத்தின் நீளத்தில் பெரும்பாலும் குறைக்கப்பட வேண்டியது சென்டிமென்ட் காட்சிகளே முழுக்க முழுக்க சண்டையை மையமாக வைத்து படத்தை எடுத்து இருக்கலாம்.

நீரவ் ஷாவின் உழைப்பும் , தீலிப் சுப்பராயன் ஸ்டண்ட் காட்சிகளும் மெய்சிலிர்க்க வைக்கின்றன.குறிப்பாக இடைவேளைக்கு முன்பான சண்டை காட்சிகளும் ,பை பாஸ் சாலை சண்டை காட்சியும் தமிழ் சினிமாவின் ஸ்டண்ட்களில் குறிப்பிடத்தகுந்த ஸ்ட்ணடாக காட்சியில் இடம்பெறும்.

பாடல்களும் , பின்னணி இசையும் அந்த அளவிற்கு படத்தோடு ஒட்டாமல் இருக்கிறது.

படத்தின் பிளஸ் :

1) அஜித்குமாரின் மாஸ்
2) நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு
3) திலீப் சுப்பராயனின் சண்டை காட்சியமைப்புகள்
4) படத்தின் முதல் பாதி

படத்தின் மைனஸ் :

1) வலிமையற்ற திரைக்கதை
2) குடும்ப சென்டிமென்ட்
3) இரண்டாம் பாதி
4) யூகிக்க கூடிய காட்சிகள்
5) படத்தின் நீளம்

மொத்தத்தில் வினோத்தின் முந்தைய படங்களில் இருந்த விறுவிறுப்பு வலிமையில் இல்லாதது மிகப்பெரிய குறை‌. அஜீத்தின் மாஸ் பிம்பத்திற்காக திணிக்கப்பட்ட சில வசனங்கள் ஏற்கும்படி இல்லை‌.

Related posts

வெளியானது வலிமை பட மோஷன் போஸ்டர்

Penbugs

வெளியானது வலிமை டிரைலர்- அஜித் ரசிகர்கள் உற்சாகம்

Kesavan Madumathy

வலிமை படத்தின் முதல் பாடல் வெளியானது

Kesavan Madumathy

மே 1 முதல் வலிமை அப்டேட் தயாரிப்பாளர் அறிவிப்பு

Penbugs

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் முன்னோட்டம் வெளியானது

Kesavan Madumathy

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற அஜித்

Kesavan Madumathy

என்னை அறிந்தால்!

Shiva Chelliah

அஜித்தின் ‘வலிமை’ பட மேக்கிங் வீடியோ வெளியானது

Kesavan Madumathy

அஜித்குமாரின் வலிமை பொங்கலுக்கு வெளியாகிறது

Kesavan Madumathy

Valimai release date confirmed

Penbugs

The First 6 balls I faced, could have cost us the game: MS Dhoni

Penbugs

Recent: Boney Kapoor confirms Valimai’s release date

Penbugs

Leave a Comment