நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குனர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வலிமை’.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டு பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
வலிமை படம் அடுத்தாண்டு 2022 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ இன்று மாலை வெளியானது.
அஜித்குமார் அவர்களின் ஸ்டண்ட் காட்சிகளின் தொகுப்பு அதில் இடம்பெற்றுள்ளது.
தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் இந்த மேகிங் வீடியோ வைரலாகி உள்ளது.