Penbugs
CricketInspiringMen Cricket

பேட்ட பராக்!

இந்த பார்டர் கவாஸ்கர் ட்ராபி
தொடங்குறதுக்கு முன்னாடியும்
சரி மேட்ச் ஆரம்பிச்சு முதல் போட்டி
நம்ம அடி வாங்கி தோல்வி அடைஞ்சப்பவும்
சரி வார்னே,பாண்டிங்,வாகன் போன்ற
எக்ஸ்பெர்ட்ஸ் எல்லாம் சொன்னது
கேப்டன் விராட் இல்ல இந்த தொடர்
முழுக்க ஆஸ்திரேலியா தன்னோட முழு
ஆதிக்கத்தை செலுத்த போகுதுன்னும்
விராட் இல்லாத இந்திய அணி ஆஸி
மண்ணுல வரலாறு காணாத தோல்வியை
சந்திக்கும்ன்னு சொன்னாங்க,அதே
நேரத்துல இந்திய அணியின் முக்கிய
பிளேயர்ஸ் எல்லாம் காயம் காயம்ன்னு
தொடர் விட்டு வெளிய போனப்போ
சிராஜ்,சைனி,நடராஜன்,வாஷிங்டன்
சுந்தர்,கில் – ன்னு ஐந்து புதுமுக வீரர்களை
டெஸ்ட் தொடருக்கு ரஹானே தலைமையிலஅறிமுகம் செய்து முழுக்க
முழுக்க டாமினேஷன் செய்து இங்கே
எக்ஸ்பெர்ட்ஸ் கணக்கை எல்லாம் தவிடு
பொடியாக்கி இருக்கின்றனர் நம் இந்திய
வீரர்கள்,

முதல் போட்டி தோல்வி அடைந்தப்பிறகு
இரண்டாம் போட்டியில் கேப்டன் ரஹானே
மெல்போர்னில் அடித்த சதத்தில் இந்தியா
வெற்றி பெற்ற அந்த போட்டி தான் இந்த
தொடைரின் மிகப்பெரிய
திருப்புமுனையாக அமைந்தது,

நம்ம கேப்டன இங்க ” ராசியான ரஹானே ” –
ன்னு சொல்லலாம்,எப்படி அவர் செஞ்சுரி
இந்த தொடர்ல ஒரு திருப்புமுனை
தந்துச்சோ அதே போல இது வரைக்கும்
ரஹானே கேப்டன்ஸில ஒரு போட்டி கூட
இந்தியா தோல்வி அடையலன்ன்றது தான்
இங்க ராசியான ரஹானேன்னு அவர
சொல்ல காரணம்,

Gabba கிரவுண்ட்டில் இத்தனை
வருடங்களாக இதுவரையிலும்
ஆஸ்திரேலிய கைகளே ஓங்கி இருந்த
நேரத்தில் இந்த போட்டியில் இரண்டு
இன்னிங்ஸிலும் மொத்தமாக
ஆஸ்திரேலிய அணியின் இருபது
விக்கெட்களையும் அனுபவம் இல்லாத
பௌலர்ஸை வைத்து ரஹானே அவரின்
கேப்டன்ஸியில் முழுக்க முழுக்க தங்களது
ஆதிக்கத்தை செலுத்தி வந்த போது
ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 328 தேவை என்ற
போது ஆடுகளத்தின் பிளவு காரணமாக
இந்த ரன்களை சேஸ் செய்வது
பேட்ஸ்மேன்களுக்கு கடினம் என்று
சொன்ன நேரத்தில் ரோஹித் விக்கெட்டை
நாம் இழந்தாலும் சுப்மன் கில் தனது
சிறப்பான பங்களிப்பை கொடுத்துவிட்டு
சென்றவுடன் இந்திய அணியின் தூணாக
நின்று தனக்கு ஏற்பட்ட காயங்களுடன்
சிறுக சிறுக குருவி இரையை சேர்ப்பது
போல் ரன்களை சேர்த்துக்கொடுத்து விட்டு
புஜாரா ஆட்டமிழந்தவுடன் மயங்க்
விக்கெட்டையும் இந்தியா
பறிகொடுத்தது,கபில் தேவ் ஸ்டைலில்
கம்மின்ஸ் பௌன்ஸரில் சிக்ஸர் அடித்த
வாஷிங்டன் தன் கடமையை சரியாக
செய்து ஆட்டமிழந்த நிலையில் ஒரு பக்கம்
பாண்ட் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியா
அணியை ஆஷஸ் தொடரில் எப்படி பென்
ஸ்டோக்ஸ் சம்பவம் செய்து காட்டினாரோ
அதே போல் பாண்ட் ஆடிய சிட்னி
இன்னிங்ஸ் மற்றும் இன்றைய Gabba
இன்னிங்ஸை தங்கள் வாழ்நாளில்
ஆஸ்திரேலிய அணி மறக்கவே முடியாத
வண்ணம் ஒரு பெரிய பேரிடர் வலியை
கொடுத்திருக்கிறார்,

இந்த தொடர் முழுக்க ஆஸ்திரேலிய
ரசிகர்கள் நிறவெறி சர்ச்சைகள் செய்த
போதிலும் ஆஸ்திரேலியா ப்ளேயேர்ஸ்
Sledging,வார்த்தை ஜாலங்கள்,அட்டாக்கிங்
டெலிவரிஸ் என்று வழக்கம் போல
தங்களின் யூகங்களை
பயன்படுத்தினாலும் விராட் இல்லாத
இந்திய அணி ரஹானே தலைமையில் 2-1
என்ற கணக்கில் தொடரை வென்று பார்டர்
கவாஸ்கர் ட்ராபியை வென்று கிரிக்கெட்
வரலாற்றில் ஒரு பெரிய சாதனையை உலக
அரங்கில் நிகழ்த்தி காட்டியுள்ளனர்,

அப்பனுக்கு அப்பன் வரத்தானே சார்
செய்வான்,நீ கொழுந்து விட்டு எரியுற
எரிதழல் நெருப்புன்னா நான் பொங்கி
எழுந்து எரிமலையா வெடிக்குற பிரளயம்ன்னு இந்திய அணி இங்க
சம்பவம் செஞ்சுருக்காங்க,

ரிஷாப் பேண்ட் கையில் இந்திய கொடியை
ஏந்த விட்டு ஆடுகளத்தில் அணி வீரர்கள்
அனைவரையும் வலம் வர வைத்த இந்திய
அணி கேப்டன் ரஹானேவின் அன்பும்
மனிதமும் இங்கே நிச்சயம் சொல்லி ஆக
வேண்டும்,

வரலாறு இங்கே மாற்றி எழுதப்பட்டது! ❤️

Picture Courtesy : Indian Cricket Team

Related posts

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஐந்து கோடி ரூபாய் போனஸ்..!

Penbugs

வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும் – நடராஜனுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

Penbugs

விரல் வித்தைக்காரனின் வியூகம்

Shiva Chelliah

பார்டர் கவாஸ்கர் டிராபி-90ஸ் மெமரிஸ்

Kesavan Madumathy

பழனி முருகன் கோயிலில் மொட்டையடித்த நடராஜன்

Penbugs

டி வில்லியர்ஸின் ஆல்-டைம் ஐபிஎல் லெவன்: எம்எஸ் டோனி கேப்டன்

Kesavan Madumathy

சென்னைக்கு வந்தா வீட்டுக்கு வாங்க: நடராஜனுடன் வீடியோகால் பேசிய சரத் குமார்

Penbugs

சென்னை டெஸ்ட் பார்வையாளர்களுக்கு அனுமதி

Penbugs

சென்னை அணியில் கொரோனா பாதிப்பு

Penbugs

சின்னபாப்பம்பட்டி திரும்பிய நடராஜன் : பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

Penbugs

சரித்திர நாயகன் தோனி …!

Kesavan Madumathy

ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

Penbugs

Leave a Comment