Penbugs
CricketMen Cricket

Proud to be an Aggressionist

யாருங்க அவர்..?

2003 இறுதி போட்டில ஆஸ்திரேலியா கூட தோற்று போய் உலக கோப்பை வாங்கிக்கொடுக்க முடியாத ஒரு ஆள எதுக்காக தலைல தூக்கி வச்சுட்டு ஆடணும்..? கேட்டா ஒரு Settle ஆன இந்தியன் டீம்க்கு விதை போட்டு மரமாக்குனது அவர் தான்னு வாய் சவுடால் பேசுவிங்க, தூக்கிட்டு போங்கடா உங்க தாத்தாவ (தாதா) என்று நகையாடிய கூட்டம் ஒன்று இருக்கிறது இன்றும், பேசுங்க சார் நீங்க பேசாம யாரு பேசுவாங்க..? பேசிட்டு போங்க. மற்றவர்களுக்கு அவர் எப்படி என்று எனக்கு தெரியாது, என்னை பொறுத்தவரை எனக்கு Inspiration, இங்கு நிறைய பேர் கேட்பார்கள் Inspiration என்று நாம் ஒருவரை சொன்னால் அவர்கள் செய்த எந்த ஒரு விஷயத்தை நீங்கள் பின்பற்றி இருக்கிறீர்கள் அவர்களை Inspiration என்று சொல்லும் அளவிற்கு என்று.

அது ஒரு Black & White TV காலம்,

அன்று அந்த தொலைக்காட்சியில் தான் என் பொழுது போக்கு கிரிக்கெட்டின் மூலம் எனக்குள் ஒரு காட்டுதீ போன்று அவரை பற்றிய விதைகள் என்னுள் விதைக்கப்பட்டு என் குருதி முழுவதும் பரவியது, கிரிக்கெட்டின் மீது அளவு கடந்த பைத்தியம் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்தது, ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டியை கூட பள்ளிக்கூடத்திற்கு காய்ச்சல் என்று பொய் சொல்லி விடுமுறை எடுத்து பார்க்கும் அளவிற்கு ஒரு விதமான போதை என்னுள் பிறந்தது,

அப்பொழுது ஏதோ Match Fixing Scandal என்று ஒரு ஊழல் அன்றைய தூர்தர்ஷன்,பொதிகை என அனைத்து செய்திகளிலும் பரவலாக செய்திகள் வந்த வண்ணமாக இருந்தது, CBI Investigation என்று எல்லாம் சொன்னார்கள் அதில் நம் இந்தியாவின் கேப்டன் அஸாருதீன் மற்றும் தென் ஆப்ரிக்கா கேப்டன் ஹன்சே க்ரோஞ் இரண்டு பேர்களின் பெயர்களும் அடிபட்டு நிரந்தரமாக அணியில் இருந்து தூக்கி வீசப்பட்டனர், அப்போது இந்திய அணிக்கு இரு மனதாக சச்சின் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டார், இந்தியா நிறைய தோல்விகளை சந்தித்தது,அணியில் ஏகப்பட்ட குழப்பங்கள்,சச்சினின் பேட்டிங் Form-உம் சிறு திணறல் ஏற்பட்டது, 

போதிய நீரும் தேவையான பராமரிப்பும் இன்றி இலைகள் உதிர்ந்து பட்டுப்போன மரத்தை போன்று விளங்கியது நம் இந்திய அணி. எளிதாக சொல்லவேண்டும் என்றால் நாம் படித்த திருக்குறளை எடுத்துக்காட்டாக கூறலாம்,

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

பொருள் : பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.

அன்று பொழிவிழந்து இருந்த இந்திய அணிக்கு கேப்டன் ஆக நியமிக்கப்பட்டார், அதிரடி மாற்றங்கள் அணியில் நடந்தது,இளம் வீரர்கள் பலர் அணிக்குள் வந்தனர், ஆங்காங்கே சிதறிக்கிடந்த அணியை இள ரத்தங்களை இணைத்து ஒரு இளமை பட்டாளமாய் அணியை தயார் செய்து தன் பங்கையும் சிறப்பாக செய்து துவண்டு கிடந்த ஒரு அணியை தன் அணியின் கூட்டு முயற்சியால் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்து ஒரு உதவிக்கரமாய் இருந்தார் அன்றைய நாளில்,

2002-ஆம் வருடம்,

என் அப்பா படுத்த படுக்கையில் இருந்தார், எனக்கோ பத்து வயது, அவர் உடல்நலம் அவருக்கு என்ன நோய் எதுவும் தெரியாது, சிறகு விரித்த பறவை போல் நான் சுற்றிக்கொண்டு இருந்தேன், உடம்பு சரி இல்லாத என் அப்பா அருகில் படுத்துக்கொண்டே கிரிக்கெட் பாத்துக்கொண்டிருந்தேன், அந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அந்த அணியின் Flintoff  தன் பனியனை கழட்டி சுற்றி ஒவ்வொரு இந்திய ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டார்,எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியை இந்திய அணி பத்து விக்கெட்டையும் இழந்து கோட்டை விட்டது, பௌண்டரி லைனில் அமர்ந்திருந்த கேப்டன் கங்குலிக்கு முழுக்க முழுக்க விரக்தியில் வாடி போகி இருந்தது அவர் முகம், எல்லோரும் சச்சின் சச்சின் என்று காலரை தூக்கி விட்டுக்கொண்ட நாளில் நான் மட்டும் கங்குலி ரசிகன் அன்று,அன்று அவரின் முகத்தை பார்த்து என் தந்தையின் மார்பில் சாய்ந்து அழுதது இன்றும் நினைவில் இருக்கிறது, 

நாட்கள் சென்றது 

சிறிது நாளில் என் அப்பா Brain Tumour நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து போனார், அவர் இறந்து விட்டார் என்று கூட அறியாத வயசு, அப்பா எங்கயோ ஊருக்கு போயிருக்கார் வந்துடுவார் என்று சொல்லி அம்மா ஏமாற்றிய காலம் அது நான் ஏக்கத்தில் வீழ்ந்து விடக்கூடாது என்பதற்காக, அப்போது எங்கள் வீட்டு டிவி சிறு குழறுபடி செய்ய அன்று Natwest போட்டியின் இறுதி ஆட்டம் இந்தியாவும் இங்கிலாந்தும் விளையாடுகிறது, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 325 ரன்களை எடுத்தது அந்த அணியின் கேப்டன் நாசர் ஹுசைன் மற்றும் ட்ரெஸ்கோதிக் ஆகிய இருவரின் சதங்களுடன், எங்கள் வீட்டு டிவி பழுதடைந்த காரணத்தினால் முதல் பேட்டிங்கை பாக்க முடியவில்லை, அம்மாவிடம் சொல்லிவிட்டு இரவு சாப்பாடு கூட சாப்பிடாமல் வீட்டிற்க்கு அருகில் இருக்கும் TV Repair Shop – இல் ஒரு கலர் தொலைக்காட்சியில் இரண்டாம் பேட்டிங்கை பார்த்துக்கொண்டிருந்தேன், இந்தியாவின் ஒப்பனர்ஸ் சேவாக் மற்றும் கங்குலி நாலாபுறமும் இங்கிலாந்து பந்து வீச்சை சிதறடித்த நேரம் அது, அந்த கடையில் கூடி இருந்த அனைவரும் விசில் மற்றும் தொண்டை பிளக்க கத்திக்கொண்டு இருந்தோம்,அதுவும் கங்குலி அன்று வெறித்தனமாக காணப்பட்டார், அவரின் Off Side Shots எல்லாம் அன்று அனல் பறந்தது வழக்கத்திற்கு மாறாக, திடீரென்று கங்குலி விக்கெட்டை இந்திய அணி இழந்தது,அனைவரும் சச்சின் இருக்கிறார் என்று தைரியமாக இருந்த நேரத்தில் அடுத்தடுத்த சரிவுகள் மோங்கியா,சச்சின்,டிராவிட்,சேவாக் என்று, பிறகு அமைந்த யுவி – கைப் கூட்டணியில் அணி சரிவிலிருந்து மீண்டு வந்தது, 

கடைசியாக நம் ஊரில் பனியனை கழட்டி சுற்றிய அதே Flintoff ஓவர் வந்தது, ஆறு பந்துகளில் இரண்டு ரன்கள் எடுக்க வேண்டும், முதல் இரு பந்துகளை வீணடித்த ஜாகிர் கான் மூன்றாவது பந்தை எதிர் நோக்கி களத்தில் நிற்கிறார், அப்போது கங்குலி பக்கம் கேமரா திரும்புகிறது, நகத்தை கடித்துக்கொண்டு மிகவும் ஆர்வத்துடன் கங்குலி உட்கார்ந்து இருக்கிறார் இன்று கிரிக்கெட்டின் Lord என்று சொல்லப்படும் Lords மைதானத்தின் பெவிலியனில்,

மூன்றாவது பந்தில் இரண்டு ரன்னை எடுத்து இந்தியா வெற்றி பெற்றவுடன் “நீ விதைத்த வலியை திரும்ப உனக்கு தருகிறேன்” என்று சொல்லும் படி தன் பனியனை கழட்டி சுற்றிக்கொண்டு கோபத்தில் சில வார்த்தைகளையும் பொழிந்த வண்ணம் தனது Most of d Aggression – ஐ வெளிப்படுத்தி மைதானத்திற்குள் வந்து கைப் மேல் கட்டிப்புரண்டு தன் வெற்றி கொண்டாட்டத்தை பகிர்ந்து கொண்டார், என் அப்பா இறந்த என் வீட்டில் அமைதி சூழ்ந்து இருக்க நான் மட்டும் கத்திக்கூப்பாடு போட்டுக்கொண்டு ஆடி குதித்தேன் வீட்டிற்கு சென்று அம்மாவிடம் இந்தியா வெற்றி பெற்றது என் கங்குலி சட்டைய கழட்டி சுத்துனாறு தெரியுமா..? ரவுடி செயின் எல்லாம் கழுத்துல போட்டு இருந்தாரு மம்மி, ன்னு அவளோ சந்தோஷமா இருந்தேன்,அன்று இந்தியா தோல்வி அடைந்த போது ஆறுதலாக இருந்த அப்பாவின் அரவணைப்பு இல்லாமல் போனதை இன்று என்னால் உணர முடிகிறது,

அப்போது எங்கள் ஊரில் இருக்கும் மைதானத்தில் சர்க்கஸ் ஒன்று போடப்பட்டது, அதில் ஒரு பெரிய வளைய பெட்டிக்குள் ஒரு சர்க்கஸ் நாய் நிற்கும், அதை வேடிக்கை பார்க்க அந்த வளையத்தை சுற்றி முந்நூறு நபர்கள் வசம் இருந்தனர், இங்கே கிரிக்கெட் அதிகம் பார்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்குமாறு அந்த நாயிடம் சர்க்கஸ் மேன் சொல்ல அந்த நாய் அந்த முந்நூறு நபர்களில் அந்த வளையத்திற்கு மேல் தன் ஒற்றை காலை தூக்கி எனக்கு எதிராக வைத்து இவர்தான் என்று சைகையில் காண்பித்தது, இளங்கன்றாக இருந்த எனக்கு அது அவளோ மகிழ்ச்சியை கொடுத்தது,

Arnold கிட்ட “Don’t Fuck around”னு சொன்னது , Aggressionகு பேர் போன ஆஸ்திரேலியா காரனயே அப்புடி ஓரமா நில்லுனு Tossல நிக்க வச்சது , Steve Waugh கூட Toss போட Trousers மட்டும் போட்டு வந்தது , Broadகிட்ட Go For a Drink Manனு சொல்லிட்டு சிக்ஸ் அடிச்சதுனு சேத்து வச்சிருந்த மொத்த Aggressionம் Team உள்ள வரக் காரணம் கங்குலி தான். அந்த Lords Celebration பத்தி புதுசா சொல்லவா வேணும்.

வருடங்கள் கழிந்தது,2003 உலகக்கோப்பை இந்திய அணி தோற்று போனது, தாதா மேல் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள், எத்தனையோ நாட்கள் அழுது கொண்டு தலையணையை நனைத்த காலம் எல்லாம் உண்டு, கங்குலி கிரிக்கெட்டை விட்டு ஓய்வு பெற்ற தினத்தில் எல்லாம், இது ஒரு புறம் இருக்க என் அப்பா இறந்த இரண்டு வருடத்தில் என் அம்மாவும் இறந்து போனார்கள், அப்போது கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்த பக்குவம் அடைந்த துளிராக நான், 

சிறு வயதிலயே என்னை பார்க்கும் அனைவரும் சொல்லுவர், இவன் அப்பாவிடம் இருக்கும் பொறுமை இவனிடம் இல்லை, சிவா அவனுடைய அம்மாவை பெற்ற தந்தை (தாத்தா) போல் மிகவும் கோபம் வருகிறது என்று, நானும் என் தாத்தாவும் சிறந்த நண்பர்கள், அவருக்கு இருந்த அந்த Short Temper அவரிடம் பழகி அதே ஜீன் மூலம் என்னிடம் ஒட்டிக்கொண்டது, இன்று எனக்கு இருபத்தி ஏழு வயதாகி விட்டது இன்றும் அந்த கோபம் என்னுள் ஒரு Aggression ஆக உருவெடுத்து இருக்கிறது, அந்த Aggression என்னுள் தீயாய் அணையா விளக்காய் காட்டுத்தீ போன்று எரிந்து கொண்டு இருக்கிறது, சின்ன சின்ன விஷயத்தில் கூட ஒரு ஈடுபாடு,அந்த ஈடுபாடுடன் ஒரு வெறி கலந்த உத்வேகமும் சேர்ந்து கொண்டது, என்னிடம் ஒருவர் வாய் விட்டால் அவர்களை வாய் அடைக்க வைக்குமாறு வார்த்தைகளை வீசுவது, என்னை நிராகரித்த சில மனிதர்களிடம் இருந்து என்னை தனிமை படுத்திக்கொண்டு “இது தான் நான்” என்று அந்த Short Temper கலந்த Aggression உடன் இருந்து வருகிறேன் இன்று, இந்த Aggression அந்த 2002 இறுதி போட்டியில் என் கங்குலியிடம் பழகியது. அந்த Aggression அன்றிலிருந்து இன்று வரை எனக்கு நிறைய மனிதர்களை இணைத்தும் வைத்திருக்கிறது, சில அந்நிய மனிதர்களை என்னிடம் இருந்து விலக்கியும் வைத்திருக்கிறது, இதனால் தான் சொல்கிறேன் என் Inspiration “சவுரவ் கங்குலி” என்று, வாய் வார்த்தைக்கு கூறாமல் என்னுடைய Inspiration-இடம் இருந்து அந்த Aggression-ஐ எடுத்துக்கொண்டு அம்மா அப்பா இல்லாவிட்டாலும் என் வாழ்க்கையை தம்,சரக்கு என்று அடிமை ஆக்காமல் அவரிடம் கற்றுக்கொண்ட அதே Aggression உடன் என் நாட்களை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் அவரின் Commentary – யில் அடிக்கும் சேட்டைகளை பார்த்த வண்ணம்,

Ganguly and Hussain were both legendary captains they shared an intense on-field rivalry. When Nasser Hussain mocked the unlikely possibility of the Indian Football Team playing in the FIFA World Cup, Dada hit back cleverly

Nasser: “When can I see India in the FIFA World Cup?”
Ganguly: “If India had played football for 50 years, then we would have qualified for the finals at least once.”

தீரா போதையாக
என்னுள் ஒரு வெறியாக
என்னை வழிநடத்தும் தந்தை போன்று
என்னை உங்கள் Aggression மூலம் இயக்கும்
என் Inspiration ஆன “Dada” விற்கு

இதை சமர்பிப்பதில் பெருமை அடைகிறேன்

Related posts

ரௌத்திரம் பழகு..!

Kesavan Madumathy

பார்டர் கவாஸ்கர் டிராபி-90ஸ் மெமரிஸ்

Kesavan Madumathy

தோனி புதிய இந்தியாவின் அடையாளம்-பிரதமர் மோடி

Penbugs

தோனி ஒரு அதிரடி கேப்டன் – ஸ்ரீசாந்த் பேட்டி…!

Penbugs

டிஆர்எஸ் முறை இருந்திருந்தால் கும்ப்ளே 900 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார்: கம்பீர்

Penbugs

சென்னை அணியில் கொரோனா பாதிப்பு

Penbugs

சவுரவ் கங்குலி தன்னை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

Kesavan Madumathy

கிரிக்கெட்டைக் குறித்து இப்போது யோசிக்க முடியாது: மனித உயிர்கள்தான் முக்கியம் – பிசிசிஐ தலைவர் கங்குலி

Penbugs

கடந்த ஐம்பது ஆண்டுகளில் சிறந்த இந்திய வீரராக டிராவிட் தேர்வு

Kesavan Madumathy

கங்குலியை நேரில் நலம் விசாரித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

Penbugs

ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

Penbugs

ஐபிஎல் போட்டிகளின் ஏற்பாடுகளை மேற்பார்வையிட துபாய் புறப்பட்டார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி

Penbugs