Penbugs
CricketInspiringMen Cricket

ரௌத்திரம் பழகு..!

ரொம்ப சாதுவா இருந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு ரௌத்திரத்தை பழக்கியவர் சவ்ரவ் கங்குலி ‌. சின்ன வயசில் கங்குலி பற்றி சொல்லப்பட்ட கதைகள் பல அதில் எந்த அளவிற்கு உண்மை , பொய்னு தெரியாது உதாரணத்திற்கு 92 ல் அணியில் வந்தாலும் தண்ணீர் பாட்டில் எடுத்து போக மாட்டேனு சொன்னதால் 96 வரைக்கும் அணியில் சேர்க்கப்படவில்லை என்று பரவலாக பேசப்படும் .

கங்குலினா ஒரு புலி மாதிரி களத்தில் இருப்பார் , அதுவும் கங்குலி கேப்டனா வந்த நேரத்தில் மேட்ச் பிக்சிங் , அணி தேர்வு குளறுபடிகள் என்று பல பிரச்சினை , வெளிநாடுகளில் வெற்றிலாம் கனவில் கூட இருக்காது என்ற நிலையில் அணி கேப்டனா வர்றார் .

இந்திய பயிற்சியாளர்களையே நம்பி இருந்த இந்திய அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் ஜான்‌ ரைட்டை கொண்டு வந்தது ,முழுக்க முழுக்க நிறைய இளம் வீரர்களை அணிக்கு கொண்டு வந்தது மட்டுமில்லாமல் அவர்களிடம் ரொம்ப கனிவா இருந்து தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களுக்கு மேலும் மேலும் வாய்ப்புகளை தந்து அவர்களின் கேரியர் கிராப்பை ஏத்தி விட்டது ‌, இதையெல்லாம் பண்ணிட்டே தன்னுடைய தனிப்பட்ட ஆட்டத்திறனையும் மெருகேற்றி கொண்டே உலகின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரராக உருவெடுத்தது என்று கங்குலியின் சாதனைகள் எப்பொழுதும் நிற்க கூடியது ‌.

மும்பை டெல்லியை மட்டும் சார்ந்து இருந்த இந்திய கிரிக்கெட் அணியை பல மாநிலங்களுக்கும் கொண்டு போனது குறிப்பா இந்தியாவின் கடைக்கோடி ஊர்களிலும் விளையாட்டு வீரர்களின்மீதும் இந்திய கிரிக்கெட் போர்டு திரும்பியது இவர் காலத்தில்தான் ‌.

எனக்கு ரொம்ப பிடிச்ச விசயம் சேவாக் அணிக்கு வந்த அப்பறம் சேவாக்கின் பேட்டிங் ஸ்டைலுக்கு அவருக்கு ஓபனிங்க்தான் சரியா இருக்கும் ஆனா ஓபனிங்கில் உலக லெவல் பெஸ்ட் காம்போவான சச்சின் – கங்குலி இணை இருக்கு கங்குலி நினைத்து இருந்தால் கடைசி வரை ஓபனிங்கா ஆடி தன்னுடைய பெயரை இன்னும் அழுத்தமாக பதியப்பட வைத்து இருக்கலாம் ஆனாலும் சேவாக்கின் கேம் இந்திய அணிக்கு பயன்தரும் இந்திய அணியின் வெற்றிதான் முக்கியம் என்று கருதி தன்னுடைய இடத்தை விட்டு கொடுத்தது லாம் வேற லெவல் .

கங்குலியின் மாஸ்டர் மூவ்னா யுவராஜ்சிங் மாதிரி ஒரு மேட்ச் வின்னரை இந்தியாக்கு உருவாக்கினது அவர் போட்ட அந்த அடித்தளம்தான் இந்தியா உலககோப்பை வெல்ல ஒரு காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை .

அடுத்து அணியில் இருக்கிற எல்லாரும் எல்லாமும் பண்ணணும் வெறும் பேட்டிங் மட்டும் இல்லாமல் பந்து வீசவும் செய்யனும் கங்குலி டீம்ல மட்டும்தான் ஏழு பேர்லாம் பந்து வீசி இருப்பாங்க .

எனக்கான தலைவன் தோனி தொடக்க போட்டிகளில் அவ்வளவாக ரன் அடிக்காத போது அவரை‌ ஒன் டவுன் அனுப்பி இந்திய கிரிக்கெட்டின் அடுத்த கட்டத்திற்கு ஒரு பெரிய அஸ்திவாரத்தை ரொம்ப அழுத்தமா போட்டதில் கங்குலிக்கு ஒரு ஸ்பெஷல் பூச்செண்டு.

பத்து பேர் ஆப் சைட்லயே பீல்டிங் வைத்தால் கூட பந்தை அடித்து ஆடாம அந்த பத்து பேருக்கு நடுவுல பவுண்டரி அடிக்கிறது பார்க்கவே அவ்ளோ அழகா இருக்கும்.அதுவும் முன்னாடி கால் வைச்சு அப்படியே பேக்ல வந்து ஒரு‌ பஞ்ச் அதுலாம் வாழ்வியலை அழகாக மாத்திய தருணங்கள்.

அடுத்து இந்த மாடர்ன்டே கிரிக்கெட்ல யார் வேணா சிக்ஸ் அடிக்கலாம் ஆனா சின்ன வயசுல சிக்ஸ்னாலே அது கங்குலிதான் அதுவும் ஸ்பின் ஓவரை அட்டாக் பண்ண நம்ம ஆளை மிஞ்ச ஆளே இல்லை .

ஒரு வேளை சேப்பல் கோச்சா வராம இருந்து இருந்தால் கங்குலி ராஜாவாகவே விடைபெற்று இருப்பார் அது ஒண்ணுதான் கொஞ்சம் பெரிய குறை இப்பவும் கமெண்ட்ரியில் ஆகட்டும் , இந்திய கிரிக்கெட் வாரிய பணிகள் ஆகட்டும் எங்கேயும் தான் ஆடிய இந்திய கிரிக்கெட்டுக்கு தன்னால் முயன்றவரை துணையாக நிற்கிறார் .

மாறுபட்ட இந்திய அணியை இந்த உலகம் பார்க்க வைச்ச ரெளத்திரன் சவ்ரவ் கங்குலிக்கு இன்று பிறந்தநாள் ….!

Related posts

தோனி புதிய இந்தியாவின் அடையாளம்-பிரதமர் மோடி

Penbugs

தோனி ஒரு அதிரடி கேப்டன் – ஸ்ரீசாந்த் பேட்டி…!

Penbugs

சென்னை அணியில் கொரோனா பாதிப்பு

Penbugs

சவுரவ் கங்குலி தன்னை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

Kesavan Madumathy

கிரிக்கெட்டைக் குறித்து இப்போது யோசிக்க முடியாது: மனித உயிர்கள்தான் முக்கியம் – பிசிசிஐ தலைவர் கங்குலி

Penbugs

கங்குலியை நேரில் நலம் விசாரித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

Penbugs

ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

Penbugs

ஐபிஎல் போட்டிகளின் ஏற்பாடுகளை மேற்பார்வையிட துபாய் புறப்பட்டார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி

Penbugs

ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் ரெய்னா

Penbugs

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை நடைபெறும் – பிசிசிஐ அறிவிப்பு

Kesavan Madumathy

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை நாளை வெளியீடு

Penbugs

இரு துருவங்களின் எழுச்சி

Shiva Chelliah

Leave a Comment