தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் வரும் நிலையில் ஏற்கனவே ஜூன் 28ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலம் (ஜூலை 5 வரை) நீட்டிப்பு .
தொற்று குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜவுளிக் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி; வணிக வளாகங்கள், நகைக்கடைகளையும் திறக்க அனுமதி
தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
கோவை ,நீலகிரி, திருப்பூர், கரூர், சேலம்,ஈரோடு,நாமக்கல் ,தஞ்சாவூர் ,திருவாரூர் நாகை,மயிலாடுதுறை
ஆகிய 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி இல்லை.
தொற்று குறைந்த மாவட்டங்களிடையே திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு செல்ல இ-பதிவு இல்லாமல் பயணிக்கலாம்; திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மத வழிபாட்டு தலங்கள் செயல்பட அனுமதி. அர்ச்சனை , திருவிழா , குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை.
11 மாவட்டங்களில் தேநீர் கடைகள், புத்தக கடைகள், காலணி கடைகள், பேன்ஸி, ஜெராக்ஸ் கடைகள் செயல்படலாம்.
தொற்று குறையாத 11 மாவட்டங்களைத் தவிர மற்ற பகுதிகளில் உடற்பயிற்சிக் கூடங்கள் 50 சதவிகித நபர்களுடன் வழக்கமான நேரத்தில் செயல்பட அனுமதி.









