Penbugs
CricketIPL

நீயே ஒளி – கார்த்திக் தியாகி

முன்ன நீ செஞ்ச தப்ப
இப்போ நீயே சரி செஞ்சுரு
உன்ன கேவலமா பேசுனவன் எல்லாம்
ஐயா சாமின்னு உன்ன தேடி வருவான்,

பிரெட் லீ ஸ்டைல்ல பௌலிங் ஆக்ஷன்
போடுறப்போவே தெரியும் இவன் காலத்துக்கும்
தவிர்க்க முடியாத ஒரு பிளேயரா நம்ம இந்திய
அணிக்கு கிடைக்க போறான்னு,

ஆல்ரெடி ரெட் பால் கிரிக்கெட்ல தியாகி
நெட் பௌலரா இருந்துட்டு இருக்கார்,
அவருக்கு அணிக்குள்ள இடம் கிடைக்க
நிச்சயமா தாமதம் ஆகும், ஏன்னா ரெட் பால்
பொறுத்தவரைக்கும் இந்திய அணியோட
தற்போதைய ஃபாஸ்ட் பௌலர்ஸ் எல்லாரும்
எதிரணிய தங்களது வேகம் மூலமா கலங்கடிச்சுட்டு
இருக்காங்க, அதனால தியாகிக்கான வாய்ப்புக்கு
டைம் எடுக்கும், அதே நேரத்துல ஒயிட் பால்லயும்
தியாகி தன்ன இன்னும் இம்ப்ரூவ் பண்ணிட்டா
போதும் நல்ல உயரம் அட்வான்டேஜ் கொண்ட
ஒரு பெஸ்ட் பேஸர் நம்ம அணிக்கு கிடைச்சுருவார்,

பல தலைமுறை நின்னு பேசும் அப்படி
ஒரு சம்பவம் பண்ணி வச்சிருக்கான் இந்த
தியாகி, பேருல மட்டும் தான் தியாகி ஆனா
அஹிம்சா வழியோ, தியாக மனப்பான்மையோ
இல்லாம ஈவிரக்கம் பார்க்காத பிசிறு தட்டாத
ஸ்கெட்ச் இன்னக்கி பண்ணிருக்க இந்த சம்பவம்,

விக்கெட் வேணுன்னு இந்த பந்தயக்குதிரை
வேட்கையோட பசியோட ஓடுது,இவன்கிட்ட
சிக்கப்போறவன் எல்லாம் சிறுத்தை கிட்ட
மாட்டுன புள்ளி மான் போல தான் ஆக போறான்,

ராஜஸ்தான் அணிக்கும் சரி இந்திய அணிக்கும்
சரி கோஹினூர் வைரம் மாதிரி கிடைச்ச ஒரு
பெரிய பொக்கிஷம் இந்த தியாகி, அந்த அளவு
பொடென்ஷியல் ஸ்டஃப் அதிகமுள்ள ஆளு இவன்,

இந்த பந்தயக்குதிரை இங்க இதோட நிக்க
போறது இல்ல,பந்தயம் அடிக்க அடிக்க
வெறியாகி போய் அடுத்தது என்னன்னு
கேட்குற பெரிய ஆயிடங்காரனா வலம் வர
போறான் இந்த கார்த்திக் தியாகி,

ஒரே ராத்திரியில் இத்தனை நாட்கள் பூட்டியே
கிடந்த கனவிலும் உனக்காக திறக்காத
கதவுகள் இன்று உனக்காக மட்டுமே
திறந்திருக்கிறது,கதவின் வாயிலில் இன்று
நிற்கும் நீ நாளை உன் சாம்ராஜ்யத்தை
இங்கு இருந்து உருவாக்க போகிறாய் தியாகி,

Picture Courtesy : Rajasthan Royals Official Twitter

~ தட் ” நீயே ஒளி ” மொமெண்ட் ரா ஏலேய்!

Related posts

சென்னை அணியில் கொரோனா பாதிப்பு

Penbugs

ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

Penbugs

ஐபிஎல் போட்டிகளின் ஏற்பாடுகளை மேற்பார்வையிட துபாய் புறப்பட்டார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி

Penbugs

ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் ரெய்னா

Penbugs

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிகள்: பிசிசிஐ அறிவிப்பு

Kesavan Madumathy

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை நாளை வெளியீடு

Penbugs

You are letting the team down: Kohli to RCB members on breaching bio-bubble protocol

Penbugs

Would’ve loved to play IPL 2020 in India: RR skipper Steve Smith

Penbugs

Will have a good chat about mind set with Pant: Alex Carey | Delhi Capitals | IPL 2020

Penbugs

What happened to my family is beyond horrible: Suresh Raina breaks silence

Penbugs

VIVO’s suspension not financial crisis: Sourav Ganguly

Penbugs

USA’s Ali Khan replaces Harry Gurney for KKR

Penbugs

Leave a Comment