தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 20,911 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
1,56,402 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 20,911 ஆக உள்ளது.
சென்னையில் ஒரே நாளில் 8,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் 20,886 வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 25 பேர் என 20,911 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 1-ம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது (ஜனவரி.13 தேதி) 20,911 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவில் இருந்து மேலும் 6.235 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 27,27,960 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் மேலும் 25 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,930 ஆக உயர்ந்துள்ளது
