Penbugs
Cricket Inspiring IPL Men Cricket

The Rise of Karnan | Shreyas Iyer

கர்ணனின் வருகை

தூதுவன் வருவான்
மாரி மழை பொழியும்
மக்கள் மனதில் ஆனந்தத்தின்
பெருமகிழ்ச்சியை உண்டு செய்வான்,

டெல்லி அணியோட தூதுவன் யாருன்னா
அதுக்கு மாற்று கருத்தே இல்ல,நிச்சயமா
எங்க வேண்டுமானாலும் அடிச்சு “ஷ்ரேயாஸ்”
பேர கத்தி கூப்பாடு போட்டு சொல்லலாம்,

எதுக்காக ஷ்ரேயாஸ தூதுவன்னு சொல்லணும்
இதுவரைக்கும் கப் அடிக்காத டீம் தானேன்னு
எல்லாரும் நினைக்கலாம்,ஆனா அதையெல்லாம்
தாண்டி ஷ்ரேயாஸோட பங்கு டெல்லி அணிக்காக
உசுருக்கு சமமான ஒன்னாக கருதப்படுது,

பல வருஷமா ஒரு ப்ராப்பர் டீம் செட் பண்ண
முடியாம தவிச்ச அணி டெல்லி,ஒரு காலத்துல
கிரிக்கெட்டோட பெரிய தலைகள் கூட இருந்த
டீம் தான்,ஆனாலும் டீம் செலக்ஷன்னு வரப்போ
“You Are Not a Clown. You Are the Entire Circus”
கதை தான் டெல்லி அணிய பொறுத்தவரைக்கும்,

2015 ஐ.பி.எல் போட்டிக்கான ஏலத்துல ஒரு
இந்தியன் Uncapped Player அதாவது அந்த
ஏலத்தில் இந்தியா தேசிய அணிக்காக
இதுவரை ஆடாத வீரர்களில் அதிக விலை
கொடுத்து எடுத்த வீரர்கள் பெயரில்
ஷ்ரேயாஸ் தான் அதிகமான தொகைக்கு
அதாவது 2.6 கோடிகள் கொடுத்து ஏலத்தில்
டெல்லி அணிக்காக எடுக்கப்பட்டார்,அந்த
ஆண்டு எமெர்ஜிங் பிளேயர் விருதும்
ஷ்ரேயாஸ் பக்கமே சாதகமாக அமைந்தது,

இதெல்லாம் ஒரு புறம் இருக்க டெல்லி அணியின்
சோகம் வழக்கம் போல் தொடர்ந்து கொண்டு தான்
இருந்தது,இப்படி அடி மேல அடி வாங்கிட்டு இருந்த
டைம்ல கொல்கத்தா அணிக்கு இரண்டு ஐ.பி.எல்
கோப்பை வென்று கொடுத்த கெளதம் கம்பீர்
சில காரணங்களுக்காக அந்த அணியில் இருந்து
வெளிவந்து தன் சொந்த ஊரான டெல்லி
அணிக்குள் நுழைந்தார் அதுவும் கேப்டனாக,

அப்போ ஐ.பி.எல் லை பொறுத்தவரை
கம்பிர் கேப்டன்சியில் ஒரு பெரிய தலக்கட்டு
அன்றைய நாளில்,அப்படிப்பட்ட கம்பீர் வந்தும்
டெல்லி அணியின் தோல்வி முகம் மட்டுமே
அனைவருக்கும் வெளிச்சம் போட்டு
காட்டிக்கொண்டிருந்தது, அப்போன்னு பார்த்து
கம்பீர் கேப்டன்சி பதவில அந்த சீசனோட பாதில
விட்டுட்டு போறாரு,அப்போ அணிய தலைமை
தாங்க யாருமே இல்ல,மூணு வருஷம் டெல்லி
அணிக்காக விளையாண்ட ஷ்ரேயாஸ் மிடில்
ஃஆப் தி சீசனில் டெல்லி அணிக்கு புதிய
கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்,அந்த சீசனின்
முடிவில் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் கடைசி
இடம்,அந்த சீசனில் தான்தான் ஆஸ்திரேலியாவின்
வின்னிங் கேப்டன் பாண்டிங் டெல்லி அணிக்காக
புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்,

2019 – ல பாண்டிங் பயிற்சியாளர் மற்றும் நம்ம
கங்குலி மென்டாராக மற்றும் முகமது கைஃப்
துணை பயிற்சியாளராகவும் டெல்லி அணிக்காக
நியமிக்கப்பட்டனர்,ஏறுமுகம் இங்கிருந்து தான்
வந்தது டெல்லி அணிக்கு,அந்த சீசனில் தான்
பாண்டிங்,கங்குலி,கைஃப்,ஷ்ரேயாஸ் நான்கு
பேரும் சேர்ந்து ஒரு Perfect Balanced Team – ஐ
சிற்பி சிலையை செதுக்குவது போல் பார்த்து
பார்த்து செதுக்கினர்,அந்த சீசனின் முடிவில்
குவாலிஃபயர்ஸ் வரைக்கும் தகுதி பெற்று
இருந்தது டெல்லி அணி,

2020 – ல இறுதி போட்டி வரை சென்று தோல்வி
அடைந்தாலும் டெல்லி அணியின் ஏறுமுகம்
தொடர்ந்து கொண்டு தான் இருந்தது,எப்படி
தாதாவின் வருகைக்கு முன் இந்திய அணி
துவண்டு கிடந்ததோ அதே போன்று அங்கும்
இங்கும் சிதறி போய் கிடந்த தங்க துகள்களை
எல்லாம் ஒன்னு சேர்த்தது ஷ்ரேயாஸ் எனும்
தூதுவனின் கேப்டன்சி டாமினன்ஸில் தான்,

ஐ.பி.எல் ல பொறுத்தவரைக்கும் மும்பை,
சென்னை,கொல்கத்தா,ஹைதராபாத்,
ராஜஸ்தான் ன்னு கப் வாங்கி ஆதிக்கம்
செலுத்திய போது சரியான படை பலத்துடன்
தன் அணியை டாப் அணியாக அனைவரின்
பார்வையும் தங்கள் அணி மீது படும் படி
ஷ்ரேயாஸ் பக்குவமாக மெருகேற்றி காட்டினார்,

தங்கள் அணியின் வெற்றியை பதிவு செய்ய
அதற்கான அங்கீகார உரிமைக்கு போராடிய
இந்த கர்ணனுக்கு அப்போது தான் அதிர்ச்சி
காத்திருந்தது,பீல்டிங்கில் மிகப்பெரிய இஞ்சூரி,
2021 ஐ.பி.எல் லில் இருந்து விலகுகிறார்,
கர்ணனின் தலைமை இல்லாததால்
கர்ணனின் படைத்தளபதி பாண்ட் அந்த
பொறுப்பை ஏற்கிறார்,கர்ணனின் இழப்பு
டெல்லி அணிக்கு பெரிய வெற்றிடம் தான்,

கண்டா வரச்சொல்லுங்க கர்ணன கையோடு
கூட்டி வாருங்கன்னு ஊரே கூடி கர்ணனின்
வருகைக்காக காத்திருந்த நாட்கள் தான்
அதிகம்,டெல்லி அணியை தாண்டி இந்திய
T20 உலக கோப்பை அணிக்கும் சேர்த்து,

கொரோனா காரணமாக 2021 ஐ.பி.எல்
பாதியில் நிறுத்தப்படுகிறது,அப்போதைய
புள்ளி பட்டியலில் ஷ்ரேயாஸ் விதை போட்டு
உருவாக்கிய பாண்ட் தலைமை தாங்கிய
டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடம்,

கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாருக்கும் ஒரு
விஷயம் அப்போ புரிய வந்துச்சு,ஷ்ரேயாஸ்
அமைச்சு கொடுத்த இந்த அணி சும்மா ஏனோ
தானோன்னு விளையாடல,கப் அடிக்கணும்ன்னு
செமயா ஒர்க் பண்ணி போராடுறாங்கன்னு,

கொரோனால தடைபட்ட ஐ.பி.எல் திரும்ப
ஆரம்பிக்குற இடைவெளில ஷ்ரேயாஸ்
Back to Fit ஆனாரு,அதுக்காக அவர் பட்ட
கஷ்டம் ரொம்ப,காயத்தினால் இங்கிலாந்து
லஞ்சய்யர் அணிக்காக விளையாடும் வாய்ப்பு
கூட அப்போது ஷ்ரேயாஷிற்கு பறி போனது,

இதான் நேரம் இந்த பேட்ட பாயுற நேரம்ன்னு
மீண்டும் அணிக்குள்ள வந்தாரு,ஆனா
ஆல்ரெடி பாதி தொடர் முழுதும் பாண்ட்
சிறப்பான கேப்டன்சி செய்ததால் அவருக்கு
உறுதுணையாக படைத்தளபதியாக இம்முறை,
அதை பார்க்கும் போது ரஜினியின் முத்து
படம் கிளைமாக்ஸ் காட்சி தான் நினைவிற்கு
வந்தது,இருந்தாலும் பாண்ட் எங்க சொத்துல
அதனால என்னன்னு மனசார ஏத்துக்கிட்டாங்க
டெல்லி அணி ரசிகர்கள்,அரசன் எங்கிருந்தாலும்
அரசன் தானே அப்படி ஷ்ரேயாஸ் என்றுமே
டெல்லி ரசிகர்களின் மனதில் ஒரு கேப்டனாகவும்
தூதுவனாகவுமே என்றும் கொண்டாடப்படுவார்,

கர்ணன் பழைய கர்ணனாகவே மீண்டும்
வந்திருப்பது டெல்லி அணிக்கு கூடுதல்
பலம்,இரண்டாம் பாதியின் முதல் இரண்டு
போட்டியிலும் கர்ணனான ஷ்ரேயாஸ்
அணிக்கு தன்னுடைய பங்களிப்பை தன்
பேட்டின் மூலம் காயத்தினால் அடைந்த வலிக்கு
தனக்கும் அணிக்கும் சேர்ந்து வலிமை சேர்த்தார்,

வரும் ஐ.பி.எல் நடப்பு போட்டிகளிலும்,
உலகக்கோப்பையில் ரீசர்வ்ர்ட் பிளேயரில்
இருந்து அணிக்குள் நுழைந்து மிடில் ஆர்டரில்
சக்கை போடு போடவும் கர்ணனின்
வெறியாட்டத்தை கொண்டாட ஊரே
காத்திருக்கிறோம் பறை இசை எங்கும் முழங்க,

Picture Courtesy : Shreyas Iyer Official Handle

ஒத்தக்கிளி நின்னா கூட கத்தும் பாரு அவன் பேர
உரிமை(கப்)க்காக போராடுபவனே இந்த கர்ணன் !!!

Related posts

Will have a good chat about mind set with Pant: Alex Carey | Delhi Capitals | IPL 2020

Penbugs

There are few World Cups to be won: Rohit Sharma

Gomesh Shanmugavelayutham

Shreyas Iyer to play for Lancashire

Penbugs

Shreyas Iyer reveals how Rahul Dravid made him a better batter

Penbugs

NZ v IND, 1st ODI: Taylor takes Blackcaps home

Penbugs

Mumbai board to take action on Shreyas Iyer and Shivam Dube

Penbugs

Miscommunication: When both Iyer & Pant walked in at no. 4 in 3rd T20I!

Penbugs

IND vs ENG- Shreyas Iyer ruled out of ODIs

Penbugs

Leave a Comment