ஆஸ்திரேலியாவிலிருந்து வெற்றியுடன் சேலம் சின்னபாப்பம்பட்டிக்குத் திரும்பினார் கிரிக்கெட் வீரர் நடராஜன்.
ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.
தமிழக வேகப்பந்து வீச்சாளரானா நடராஜன் தனது அறிமுக சர்வதேச தொடரில் சாதித்தார்.
ஒரு தொடரில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகியுள்ள முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை நடராஜன் பெற்றார்.
29 வயதான அவர் பெங்களூரில் இருந்து தனது சொந்த ஊரான சின்னப்பாப்ம்பட்டிக்கு இன்று திரும்பினார்
கடந்த மாதம் 6-ந் தேதி தான் நடராஜனின் மனைவி பவித்ராவுக்கு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
அதேநேரத்தில் இந்திய அணியில் இடம் பிடித்து ஆஸ்திரேலியா சென்றுவிட்டதால் முதன் முதலாக தனது குழந்தையை காணும் ஆர்வத்தில் நடராஜன் வந்து உள்ளார்.
சொந்த ஊர் திரும்பிய அவருக்கு ஊர்மக்கள் சார்பாக பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டன.



